சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

உருட்டல் மிரட்டலுக்கு அடிபணிவானா வெற்றி.. அதிரடி முடிவெடுத்த அபி!

சின்னத்திரை ரசிகர்களிடையே விஜய் டிவி சீரியல்கள் என்றாலே தனி மவுசு. அந்தவகையில் மதிய நேரம் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை செல்லச் சண்டைகளை போட்டுக்கொண்டிருக்கும் கணவன் மனைவியான வெற்றி-அபி இருவருக்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு.

இந்நிலையில் பிடிக்காமல் கல்யாணம் செய்துகொண்ட அபியை மறந்துவிட்டு சிறுவயதிலிருந்து உன்னை காதலிக்கும் ராதாவை திருமணம் செய்து கொள். இல்லை என்றால் என்னை உயிருடனே பார்க்க முடியாது என வெற்றியின் அம்மா வெற்றியை மிரட்டிய நிலையில், அபி மேல் இருக்கும் காதலை மறைத்து ராதாவை திருமணம் செய்து கொள்ள திருமண மேடை வரை செல்கிறான்.

மறுபுறம் ரவுடியான வெற்றியை மருமகனாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் அபியின் பணக்கார அப்பா, வெற்றியின் அம்மா போலவே செத்து விடுவேன் என மிரட்டி அபியிடம் சத்தியம் வாங்கி அபியை சிறுவயதிலிருந்தே காதலிக்கும் சக்திக்கு திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர்.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில் அபி சக்தியை திருமணம் செய்து கொண்டு, வெற்றியை கட்டிய தாலியை கழட்டி விடுவாளா என ரசிகர்கள் இனி நடக்கப் போகிறது என்பதை ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள காத்திருக்கின்றனர். இன்னிலையில் வெற்றி ராதாவை திருமணம் செய்து கொள்ள மறுத்து, அங்கிருந்து கிளம்பி அபி -சக்தி இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கும் மண்டபத்திற்கு விரைகிறான்.

அங்கு வந்த வெற்றி, ‘என்னுடைய ரத்தம், உடம்பு மூச்சு எல்லாமே அபிதான். வானம், பூமி, இந்தக் கோவிலில் இருக்கும் சாமி மேல் சத்தியமாய் உன்னை மட்டுமே மனதார காதலிக்கிறேன்’ என அபி மேல் இருக்கும் காதலை தெரிவிக்கிறான். உடனே அபியும் ‘இந்த ஜென்மத்தில் வெற்றி நான் என்னுடைய கணவர்’ என மேடையில் இருந்து எழுந்து வந்து வெற்றியை கட்டிப் பிடிக்கிறாள்.

தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலில் வெற்றி மற்றும் அபி இருவரும் தங்களது பெற்றோர்களின் உருட்டல் மிரட்டலுக்கு பயப்படாமல் துணிச்சலாக அவர்களது வாழ்க்கையில் எடுத்திருக்கும் இந்த முடிவை ரசிகர்கள் வரவேற்கின்றனர்.

- Advertisement -

Trending News