புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

500 ரூபாய்க்கு ஒரு இட்லி, சாப்பிட்டால் சாகா வரம் தான்.. சென்னையில் வைரலாகும் புதிய வகை இட்லி

A2B 50 rs Idli: சூடா, புசு புசு என்று நாலு இட்லி, சட்னி மற்றும் சாம்பார் ஒவ்வொரு வீட்டிலும் காலையில் இடம்பெறும் தரமான டிபன் வகை. இட்லியில் குஷ்பூ இட்லி, தட்டு இட்லி, டம்ளர் இட்லி, பொடி இட்லி, மினி இட்லி கேள்விப்பட்டிருப்போம்.

500 ரூபாய் இட்லி கேள்விப்பட்டு இருக்கீங்களா. இப்போ சென்னைல இந்த இட்லி தான் பேமஸ். ஐநூறு ரூபாய்க்கு இட்லி என்றால் ஒரு ஊரே உக்காந்து சாப்பிடுவதற்காக என்று நினைக்க வேண்டாம். ஒரு இட்லியின் விலையே 500 ரூபாய்.

அப்படி அந்த இட்லியில் என்ன இருக்குதுன்னு விசாரிச்சு பார்த்தா, அந்த இட்லியை சாப்பிட்டால் சாகா வரம் கிடைக்குமாம். இதை படிக்கும் போதே பலருக்கும் சிரிப்பு வந்துவிடும். ஆனால் இதைச் சொல்லித்தான் இந்த இட்லியை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

A2B நிறுவனம் இந்த இட்லியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஒரு இட்லியை சின்ன சின்ன பீசுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்கிறார்கள். அதன் மேல் ப்ளூபெர்ரி பழங்கள் மற்றும் ஊறவைத்த பாதாம் சேர்க்கப்படுகிறது.

மேலும் ஆலிவ் எண்ணெயும் தேவையான அளவு அந்த இட்லியில் ஊற்றப்படுகிறது. பிறகு சட்னி சேர்த்து கலக்கி இந்த இட்லியை சாப்பிட வேண்டும். கேட்கும்போதே என்ன இது என்று முகம் சுளிக்கும் அளவுக்கு தான் இருக்கிறது.

ஆனால் இந்த இட்லியை சாப்பிட்டால் வயசே ஆகாது, நிறைய ஆராய்ச்சி எல்லாம் இதை வைத்து நாங்கள் செய்திருக்கிறோம் என்று வியாபாரம் செய்கிறார்கள். உண்மையில் அந்த நிறுவனத்தின் வெப்சைட்டில் போய் பார்த்தால் அந்த ஆராய்ச்சிக்கான எந்த ஒரு உறுதியான தகவலும் இல்லை.

இது ஒரு வித்தியாசமான முயற்சியாக இருக்கின்றது என ஒரு சிலர் இதை வாங்கி சாப்பிட தான் செய்கிறார்கள். நிறைய செலிபிரிட்டிகளை வரவைத்து, இட்லியை சாப்பிட வைத்து இப்போது பிரமோட் செய்து கொண்டிருக்கிறார்கள். எது எப்படியோ இந்த சாகா வரம் கொடுக்கும் இட்லி இப்போது சென்னையில் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது.

- Advertisement -

Trending News