விஜய்க்கு வலை வீசும் இளம் நடிகை.. த்ரிஷாவை ஓரம் கட்ட வரும் 19 வயசு செல்லமான ஹீரோயின்

தற்போது விஜய்யின் லியோ பட சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சோசியல் மீடியா முழுவதுமே அது பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருவது கூடுதல் சிறப்பு. இதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கவும் செய்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் திரிஷாவை ஓரம் கட்டும் வகையில் 19 வயது இளம் நடிகை ஒருவர் விஜய்க்கு வலை வீசி இருக்கிறார். அதாவது லியோ படத்தை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் 68வது படம் பற்றிய பேச்சு இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சூப்பர் குட் ஃபிலிம்சின் 100வது படத்தில் விஜய்யை வைத்து தயாரிக்க இருக்கிறார் ஆர் பி சவுத்ரி.

Also Read: லியோ விஜய் ஃபேமிலி மெம்பர்ஸ்.. சாக்லேட் கம்பெனியாக மாறிய ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ்

இப்படத்தை தெலுங்கு இயக்குனரான கோபிசந்த் இயக்க உள்ளார். அதை தொடர்ந்து தெலுங்கு படமான கஸ்டடி படத்தின் இளம் ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அது குறித்த பேச்சு வார்த்தை இப்போது நடைபெற்று வருகிறதாம். இதனால் கீர்த்தி இப்போது ரொம்பவும் குஷியாக இருக்கிறார்.

ஏனென்றால் இவர் தன் சிறு வயதிலிருந்து விஜய் படங்களை பார்த்து சினிமாவில் நடிக்கும் ஆசையை வளர்த்துக் கொண்டதாக பலமுறை கூறி இருக்கிறார். மேலும் விஜய்யின் அப்படி போடு என்ற பாடலை போட்டுக் கொண்டு வீட்டில் ஆடிக் கொண்டிருப்பாராம். அதனாலேயே விஜய் உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை வெகு நாளாக இருந்ததாகவும் அது தற்பொழுது நிறைவேற போவதாகவும் கூறி வருகிறார்.

Also Read: லியோவை வைத்து கஸ்டடியை வியாபாரம் செய்யும் வெங்கட் பிரபு.. தல தப்புமா?

மேலும் இவரின் குலைந்து குலைந்து செல்லமாக பேசும் தோரணை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும். அவ்வாறு இருக்க தமிழில் சூர்யாவுடன் நடிக்க இருந்த வணங்கான் படம் நின்று போனது அவருக்கு வருத்தத்தை அளித்தது. இந்நிலையில் தன் ஃபேவரைட் நடிகரான விஜய்யுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பினை பெற்ற இவர் தன்னை அதிர்ஷ்டசாலியாக நினைத்து வருகிறார்.

அதை தொடர்ந்து டாப் ஹீரோயின்கள் தரப்பில் வெறும் 19 வயதே ஆன ஹீரோயினுக்கு விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பா என்ற வயித்தெரிச்சலை உண்டாக்கி வருகிறார். மேலும் லியோ படத்தின் ஜோடியான த்ரிஷாவை இப்படத்தின் மூலம் இவர் ஓரம் கட்டுவார் எனவும் நம்பப்படுகிறது.

Also Read: விஜய் பட நடிகை அணிந்திருந்த வைர நெக்லஸ் புகைப்படம்.. தளபதி சம்பளத்தை விட இரண்டு மடங்காம்

Next Story

- Advertisement -