வெறும் 36 ஆயிரத்தில் 5 மடங்கு லாபம் தந்த படம்.. ஏவி மெய்யப்பச் செட்டியார் செய்த சாதனை

இன்று பிரபலமாக இருக்கும் ஏவிஎம் ஸ்டுடியோஸ்சின் முதலாளி தான் ஏவி மெய்யப்பச் செட்டியார். இந்த நிறுவனம் பல படங்கள் மற்றும் சீரியல்களை தயாரித்தது. ஆரம்ப காலத்தில் ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரை எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்கள் முதலாளி என்றுதான் அழைப்பார்களாம்.

மேலும் ஏவிஎம் நிறுவனம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் ஏ வி மெய்யப்ப செட்டியார் தயாரிப்பில் 1941 இல் வெளியான திரைப்படம் சபாபதி. இப்படத்தை கிருஷ்ணசாமி மற்றும் ஏவி மெய்யப்பன் இருவரும் இயக்கி இருந்தனர்.

இப்படத்தில் டி ஆர் ராமச்சந்திரன், கே சாரங்கபாணி, ஹிரன்யா, பத்மா, பி ஆர் மங்கலம் போன்றோர்கள் நடித்திருந்தனர். இப்படம் முழு நீள காமெடி படமாக எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் சபாபதி படம் வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டது.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அப்போதைய காலகட்டத்தில் இப்படம் 36000 ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதைவிட பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை இப்படம் லாபமாக பெற்றது.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்த டிஆர் ராமச்சந்திரனுக்கு சம்பளமாக வெறும் 67 ரூபாய் கொடுக்கப்பட்டது. அவருக்கு ஜோடியாக நடித்த ஹீரோயினுக்கு 45 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால் அப்போதைய காலகட்டத்தில் இந்தப்படம் இவ்வளவு லாபம் பார்த்தது எல்லோரையும் பிரமிக்கச் செய்தது.

மேலும் தற்போது ஏவிஎம் நிறுவனத்தில் மெய்யப்பச் செட்டியார் மகன் ஏவிஎம் சரவணன் நிர்வகித்து வருகிறார். ஆனால் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது பெருமளவில் எந்த படங்களையும் தயாரிக்கவில்லை. ஏனென்றால் தற்போது உள்ள நடிகர், நடிகைகளே சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்