வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பருத்தி முட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம்.. டைட்டில் வின்னர் ஆகியும் பத்து பைசா பிரயோஜனம் இல்லாத 6 பேர்

சினிமாவில் நடித்து எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று நிறைய பேரின் கனவாக இருந்தவர்களுக்கு ஒரு மேடையாக அமைந்தது தான் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ. அப்படி இதில் கலந்துகொண்டு அதிகமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து டைட்டில் வின்னர் ஆகியும் பத்து பைசாக்கு பிரோஜனம் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு பருத்தி முட்டை பேசாம குடோன்லயே இருந்திருக்கலாம் என்று சொல்லும் படியாக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி பார்க்கலாம்.

ரித்விகா: இவருக்கு மிகப்பெரிய ஆசையை படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக சிறு வயதில் இருந்தே நிறைய படங்களை பார்ப்பதையே வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதன்பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது இவருடைய கனவாகவே மாறிவிட்டது. அப்படி நடித்த முதல் படம் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த பரதேசி. இந்த படத்தில் கருத்தகன்னி வேடத்தில் நடித்திருப்பார். அதன் பின் சிறிய கேரக்டரில் நடித்து வந்த இவர் மெட்ராஸ் படத்தில் மேரி என்ற கேரக்டரில் நடித்து மிகவும் பரிச்சயம் ஆகிவிட்டார்.

பிறகு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் இதயங்களை வென்று வெற்றியாளராக ஆனார். இதுவரை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பெண் போட்டியாளர் என்றால் அது இவர்தான். இதன் பிறகு டார்ச்லைட் என்ற படத்தில் சதா உடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் என்னதான் வெற்றி பெற்றாலும் இவருக்கு சினிமாவில் ஒரு நல்ல வரவேற்பு இல்லாமல் தவித்து வருகிறார்.

ஆரி அர்ஜுனன்: இவர் ஒரு சமூக ஆர்வலராகவும், தமிழ் கலாச்சாரம், மொழி மற்றும் விவசாயத்திற்கு ஆதரவு அளிக்க கூடியவராக இருந்து வருகிறார். இவர் 2005 ஆம் ஆண்டு அலையடிக்குது என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பின்பு ரெட்டைசுழி என்ற படத்தில் ஆரி கதாநாயகனாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து ஒரு வெற்றியாளராக வந்தார். ஆனாலும் இவருக்கு சினிமாவில் நல்ல கதாபாத்திரம் அமையாமல் போராடி வருகிறார்.

Also read: கேவலமாக நடந்து கொள்ளும் சிவாங்கி.. வளரவே இல்ல அதுக்குள்ள இப்படியா

முகேன் ராவ்: இவர் ஒரு பாடகராகவும் மற்றும் மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவராகவும் இருக்கிறவர். மலேசியாவில் இருந்து சமூக வலைதளங்களின் மூலமாக இசை ஆல்பங்களை வெளியிட்டார். அது மிகவும் வைரல் ஆகி இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தன. அதன்பின் 2016 ஆம் ஆண்டு “கயல்விழி” என்ற இவரது தமிழ் பாப் சிங்கிள் யூடியூபில் மிகவும் வைரலானது. அதன் மூலம் பார்வையாளரிடம் இருந்து மிகவும் பிரபலமாகினார். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு வெற்றியாளராக கோப்பையை பெற்றார். இதனை வைத்துக்கொண்டு வேலன் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இதற்கு அடுத்து இவருடைய படங்கள் எதுவும் வெளிவராமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறது.

ஆரவ் நபீஸ்: ஆரவ் என்று பிரபலமாக அறியப்படும் இவர் இந்திய நடிகரும், மாடலும் ஆவார். இவர் பிக் பாஸ் சீசன் முதல் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியாளராக வந்தவர். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட துறையில் நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பின் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் இவருக்கு எந்த விதத்திலும் கை கொடுக்கவில்லை. பிறகு கலகத் தலைவன் படத்தில் ஹீரோவுக்கு எதிரியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனாலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றாலும் இப்பொழுது வரை இவருக்கு சொல்லும் படியாக பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

Also read: விக்ரமனை அடுத்து அபியூஸ் அசீம் வெளியிட்ட வைரல் ட்வீட்.. ச்சே இவரை போய் கருப்பு ஆடுன்னு சொல்லிட்டோமே

ராஜு ஜெயமோகன்: இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமான நடிகராக இருந்தார். அதன் பின் இவர் 2021 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 5 வில் கலந்து கொண்டு ஒரு போட்டியாளராக வெற்றி பெற்றார். ஆனால் அதன் பிறகு இவர் நிறைய படங்களில் நடித்து ஒரு ஹீரோவாக வருவார் என்று எதிர்பார்த்து நிலையில் மீண்டும் விஜய் டிவியிலேயே குப்பைக் கொட்டிக் கொண்டு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் டைட்டில் வின்னர் ஆகியும் எந்தவித பிரயோஜனமும் இல்லாமல் தான் இருக்கிறார்.

அசீம்: இவர் நிறைய தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி ஹீரோவாக நடித்து மிகவும் பிரபலமான நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இவர் நடித்த சீரியலில் பிரியமானவள், பகல் நிலவு கடைக்குட்டி சிங்கம் இந்த தொடர்கள் அனைத்தும் ஒரு வெற்றி தொடராக இவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. அதன் பின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கி இவரது பெயரை கொஞ்சம் கெடுத்துக் கொண்டாலும் இவருக்கு இருந்த ரசிகர்கள் மூலம் ஒரு எதிர்பார்த்த வெற்றிப் போட்டியாளராக வந்தார். அதன் மூலம் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து இவருக்கு என்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்த்து நிலையில் இப்பொழுது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்.

Also read: கமல்ஹாசனை காலில் வைத்து மிதித்த பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ்.. வைரலாகும் ரசிகர் செய்த புகைப்படம்

 

- Advertisement -

Trending News