வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஆந்திராவில் 50 தியேட்டரில் 100 நாள் ஓடிய தமிழ் படம்.. இதுவரை எந்த ஒரு ஹீரோவும் செய்யாத சாதனை.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சூர்யா, ரஜினி, கமல் இவர்களது படங்கள் பொதுவாக ரிலீஸ் ஆனால்  பெரிய ஆர்ப்பாட்டத்துடன், கோலாக்கலமாக இவர்களின் ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள். மேலும் இவர்களின் படங்கள் அதிக நாட்களில் திரையரங்கில் ஓடி பெரிய சாதனை படைக்கும். அத்துடன் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அக்கட தேசத்திலும் வெற்றி பெறும். ஆனால் இவர்களில் ஒருவர் படம் மட்டும் தமிழ்நாட்டையும் தாண்டி ஆந்திராவில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கிறது.

அவர் வேறு யாருமில்லை நம்மளுடைய ரஜினிகாந்த். இவருடைய நடிப்புக்கு ஈடு இணையாக வேறு யாரும் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு மிக உச்சத்தில் இருக்கிறார். இவர் ஆரம்ப காலத்தில் குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லனாக நடித்து பின்பு ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவருக்கு மிகப்பெரிய பலமே இவருடைய ஸ்டைல் தான். அத்துடன் இவரின் படங்கள் எப்பொழுதுமே ஒரு வெற்றி படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லாத அளவிற்கு நடித்திருப்பார்.

ஆனால் இவருக்கும் சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிக் கொடுக்காமல் தோல்வி படமாகவும் அமைத்திருக்கிறது. அந்த நேரங்களில் மிக உத்வேகத்துடன் எந்தவித தளர்ச்சியும் அடையாமல் இரண்டு மடங்குகளுக்கு மேல் நடித்து வெற்றியை கொடுத்திருக்கிறார். அப்படி சில வருடங்களுக்கு முன்பு பெரிய அளவில் வெற்றி கொடுத்த படம் தான் சந்திரமுகி.

Also read: ரஜினிக்கு நிகரான கதாபாத்திரம் கொடுங்க இல்லன்னா நடிக்க மாட்டேன்.. அலப்பறை செய்த முன்னணி நடிகர்

இந்தப் படத்தை அவ்வளவு ஈசியாக யாராலும் மறக்க முடியாது. இதில் இவருடன் பிரபு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வசூல் சாதனையை கொடுத்துள்ளது. பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு நகைச்சுவை மற்றும் திரில்லர் திரைப்படமாக வெளிவந்தது. இதில் இவர் நடித்த டாக்டர் சரவணன் மற்றும் வேட்டையன் ராஜாவாக நடித்த இரண்டு கேரக்டரும் பெரிய அளவில் பேசப்பட்டது.

அத்துடன் இப்படத்தை டப்பிங் செய்து ஆந்திர மாநிலத்திலும் வெளியிட்டனர். அங்கே சுமார் 53 தியேட்டர்களில் ஓடி 100 நாட்களைக் கடந்து வெற்றி சாதனை படைத்தது. மேலும் 6 தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. இந்த மாதிரி ஒரு வெற்றியை தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு ஹீரோக்களாலும் கொடுக்க முடியவில்லை. இவர் படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஆந்திராவிலும் ஓடி பெரிய சாதனை படைத்திருக்கிறது.

Also read: மனிதம் காத்து மகிழ்வோம்.. ரஜினியை நெகிழ வைக்க ரசிகர்கள் செய்த சம்பவம்

இந்த மாதிரி ஒரு சாதனை ரஜினி நடித்த சந்திரமுகி படத்தால் மட்டுமே சாத்தியம் ஆகி இருக்கிறது. தற்போது வரை இந்த சாதனையை வேற எந்த நடிகராலும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் கேரளாவிலும் அதிக வசூல் சாதனை புரிந்து வெற்றி படமாக ஆனது. அந்த நேரத்தில் மோகன்லால் நடித்த சந்திரோல்சவம் படத்தை விடவும் சிறப்பாக அமைந்தது என்று பெயரை பெற்றது.

இப்படி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இவரது கொடியை ஆந்திராவிலும் பரக்கச் செய்த பெருமை இவரை சாரும். எத்தனை வருடங்கள் ஆனாலும் இவர்களுடைய ஸ்டைல், நடிப்பு மட்டும் இன்னும் குறையவே இல்லை என்றே சொல்லலாம். சொல்லப் போனால் இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதனால் தான் இவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்திருக்கிறது. இதற்கு பொருத்தமானவராக கண்டிப்பா இவரால் மட்டும் தான் இருக்க முடியும்.

Also read: ஒரே பாட்டால் பணக்காரங்களாக ஆன மாதிரி காட்டிய 5 படங்கள்.. அதிக அளவில் மோட்டிவேஷன் கொடுத்த ரஜினி

- Advertisement -

Trending News