வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சூடு சொரணை இல்லாத குணசேகரன்.. ஜனனி செய்யப்போகும் தரமான சம்பவம்

எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை நோக்கி கொண்டு போய்க் கொண்டிருக்கிறது. இதில் யார் என்ன சொன்னாலும் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்று ஒவ்வொரு விஷயங்களையும் செய்து வரும் குணசேகரன், அவருடைய அம்மா தன் மகளின் வாழ்க்கைக்காக சாறு பாலாவின் காலில் விழுந்து கெஞ்சுவதை பார்த்தும் கூட மனம் இறங்காமல் இருக்கிறார்.

இதனை அடுத்து குணசேகரன், ஆதிரை திருமணத்தை சூட்டோட சூட்டாக முடிக்க வேண்டும் என்று கரிகாலன் உடன் கல்யாண பத்திரிக்கை அடித்திருக்கிறார். இந்த பத்திரிக்கையை முதலில் எஸ்கேஆர் குடும்பத்திடம் கொடுத்து அவர்களை சீண்டி பார்க்க வேண்டும் என்ற ஒரு வக்கிர புத்தியில் எஸ்கேஆர் குடும்பத்திற்கு வருகிறார். ஆனால் அங்கே விசாலாட்சி, மகளின் வாழ்க்கைக்காக காலில் விழுவதை பார்த்து குணசேகரன் ஆவேசப்படுகிறார்.

Also read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

அதன்பின் குணசேகரன் நீங்கெல்லாம் என்கிட்ட கேட்காமல் ஏன் இங்கே வந்து இப்படி என்ன அசிங்கப்படுத்துறீங்க என்று கேட்க, அதற்கு விசாலாட்சி நீ உன் வேலையை மட்டும் பார்த்துகிட்டு போ எனக்கு என்ன பண்ணனும் தெரியும் இது என் பொண்ணோட வாழ்க்கை யாரும் தலையிடாதீங்க என்று கூறுகிறார். இதை நான் தான் எடுத்து நடத்த முடியும் ஆதிரை வாழ்க்கைக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் நான் முடிவு பண்ணிட்டேன் என்று சொல்கிறார்.

அதற்கு ஆதிரை நீ நினைக்கிறது நடக்காது. நான் அருணை மட்டும் தான் கல்யாணம் செய்வேன் என்று கூறுகிறார். இதை பார்த்த சாருபாலா எதுவாக இருந்தாலும் நீங்கள் எல்லாரும் உங்க வீட்டில் இருந்து பேசிக் கொள்ளுங்கள். இங்கு இருந்து முதலில் கிளம்புங்கள் என்று கூறுகிறார். பிறகு குணசேகரன் வீட்டில் கரிகாலன் வந்ததும் அவரிடம் பத்திரிக்கையை கொடுக்கிறார்.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

கரிகாலன் இதை பார்த்து எனக்கும் ஆதரிக்கும் கல்யாணம் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். இதற்கிடையில் ஜனனி ஆவேசமாக குணசேகரனுக்கு சரியான பாடத்தை கொடுக்க வேண்டும் என்று ஒரு தரமான சம்பவத்தை செய்யப் போகிறார். அப்படி என்ன ஜனனி செய்யப் போகிறார். இவரால் மிஞ்சி மிஞ்சி போனா எஸ் கே ஆர் குடும்பத்திடம் போய் கெஞ்சி ஆதிரை அருண் திருமணத்திற்கு சம்மதத்தை வாங்குவார்.

எப்படி இருந்தாலும் கடைசியில் ஆதிரை அருண் திருமணம் தான் நடக்கப்போகிறது. அது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதற்கு ஏன் இவ்வளவு அக்கப்போர் தனம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என்று தான் தெரியவில்லை. ஆனாலும் இந்த ஆதிரை அப்படி ஒன்னும் நல்லவள் கிடையாது. இதற்கு பேசாமல் அவங்க அண்ணன் சொன்ன மாதிரி கரிகாலனை கல்யாணம் பண்ணி இருக்கலாம். பார்க்கலாம் வரப்போகிற எபிசோடுகள் எந்த மாதிரியான திருப்பங்களை கொடுக்கிறது என்று.

Also read: டிஆர்பிக்காக கெஞ்சி கூத்தாடிய விஜய் டிவி.. கோபி எடுத்த அதிரடி முடிவு

- Advertisement -

Trending News