வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பாக்கியா போல ஒண்டிக்கட்டையாக போகும் மகன்.. 50 வயதிலும் உல்லாசமாக இருக்கும் மானங்கெட்ட அப்பா

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் இப்போது பாக்யா தலையில் இடியே விழும் வழியாக ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது 50 வயதிலும் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டாவது திருமணம் செய்து கொண்டு கோபி சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

அதுவும் சமீபத்தில் தனது மூத்த மகனுக்கு குழந்தை பிறந்ததால் தாத்தாவும் ஆகிவிட்டார். இவ்வாறு இருக்கும் போது கோபி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ராதிகாவுடன் இருந்து வருகிறார். ஆனால் இவர் செய்த பாவம் தான் போல இப்போது அவரின் மகனின் தலை மீது விழுந்துள்ளது. அதாவது கோபியின் இளைய மகன் எழில் கணவனை இழந்த அமிர்தாவை திருமணம் செய்து கொண்டார்.

இத்தனை வருடமாக இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் உயிர் பிழைத்து விடுகிறார். அதோடு மட்டுமல்லாமல் எழிலை அமர்த்த திருமணம் செய்து கொண்ட விஷயமும் கணேஷுக்கு தெரிந்து விட்டது. ஆனாலும் குழந்தை மற்றும் அமிர்தா தனக்கு வேண்டும் என்ற உறுதியாக இருக்கிறார்.

இந்த விஷயம் இதுவரை எழில் குடும்பத்திற்கு தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் அமிர்தாவின் மாமியார் மற்றும் மாமனார் பாக்யாவை சந்திக்கிறார்கள். அப்போது கணேஷ் உயிரோடு இருக்கும் விஷயத்தை கூறுவதால் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்து விடுகிறார். எழில் ஆசைப்பட்டு அமிர்தாவை திருமணம் செய்து கொண்டார்.

இப்போதுதான் இவர்கள் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் அமிர்தாவின் முன்னாள் கணவர் வந்துள்ளதால் நிலைகுலைந்து போன பாக்யா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் பாக்கியலட்சுமி தொடர் வரும் வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கனவே பாக்யா பல சிக்கலை சந்தித்து வருகிறார்.

கணவன் தன்னை ஏமாற்றிய நிலையில் ஒண்டிக்கட்டையாக இருந்து பல பெண்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்பதற்காக தன்னம்பிக்கையுடன் இருந்து வருகிறார். இப்போது தன்னைப் போலவே மகனும் இதே நிலைமையில் வந்து விடுவாரோ என்ற பயத்தில் பாக்கியா இருக்கிறார். மேலும் எழில் இந்த விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- Advertisement -

Trending News