மனுசன மாதிரி ரோபோ செய்த தற்கொலை.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன உலக நாடுகள்

Robot commits suicide: மனிதனுக்கும் எந்திரத்திற்கும் உள்ள ஒரே வித்தியாசம் உணர்வுகள் தான். எந்திரத்திற்கு உணர்வு வந்தால் என்ன ஆகும் என்பதை பல படங்களில் நாம் பார்த்திருப்போம். ஆனால் உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்து உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

பல நிறுவனங்களில் மனிதர்களுக்கு பதிலாக ரோபோட்டுகளை வேலை செய்ய வைக்கும் முயற்சி நடைபெற்ற வருகிறது. இதில் தென் கொரியா நாடு ரொம்பவே முன்னோடி. இந்த நாட்டில் அதிகமாக ரோபோட்டுகள் வேலைகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

மனுசன மாதிரி ரோபோ செய்த தற்கொலை

அப்படி வடகொரியாவில் மாநகராட்சி அலுவலகம் ஒன்றில் ரோபோட் ஒன்று சூப்பர்வைசர் வேலை செய்து வந்திருக்கிறது. இந்த ரோபோவுக்கு அலுவலக கார்டு கூட உண்டு. ஒன்பது மணியிலிருந்து ஆறு மணி வரை இதன் வேலை நேரம்.

கோப்புகளை மக்களிடமிருந்து வாங்குவது அதிகாரிகளிடம் ஒப்படைப்பது, நகரம் முன்னேற்றம் போன்ற பல வேலைகளில் இந்த ரோபோட் ஈடுபட்டு வந்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை இந்த ரோபோட் படிக்கட்டில் இருந்து விழுந்து உடைந்து போய் இருக்கிறது.

பின்னர் சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை பார்த்திருக்கிறார்கள். அதில் இந்த ரோபோட் ரொம்பவும் குழப்பமான நிமிட நிலையில் இரண்டாவது மாடியில் தளத்தில் அங்கும் இங்கும் ஆக நடந்து கொண்டிருக்கிறது.

அதன்பின்னர் திடீரென படிக்கட்டில் இருந்து ஆறடி தூரத்திற்கு கீழே உதித்து இருக்கிறது. இப்படி ரோபோட் தானாகவே கீழே விழுந்து தன்னைத்தானே உடைத்து இறந்திருக்கிறது. தொடர்ந்து கொடுக்கப்பட்ட வேலை அழுத்தம் தான் இந்த ரோபோட் இப்படி செய்ததற்கு காரணம் என்று சொல்கிறார்கள்.

மனிதனுக்கு வேலை அழுத்தம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ரோபோட் வேலை பளு தாங்காமல் இப்படி செய்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Next Story

- Advertisement -