இளையராஜா வரும்போது தம்மடித்த நடிகர்.. பிறவிப் பணக்காரன் என்பதால் வந்த ஆணவம்

Ilayaraja: இளையராஜா எத்தகைய கலைஞர் என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்றுதான். அந்த காலம் முதல் தற்போது இருக்கும் 2k கிட்ஸ் வரை அவரது இசைக்கு அடிமை. அவரது கச்சேரி எங்கு நடந்தாலும் ரசிகர்கள் முந்தியடித்துக்கொண்டு சொல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்நிலையில் சினிமாவில் இளையராஜாவுக்கு என்று மிகப்பெரிய பெயர் உண்டு.

அவரை விட வயதில் மூத்தவர்கள் கூட இளையராஜாவுக்கு மரியாதை கொடுப்பார்கள். அதுமட்டுமின்றி அவரது ரசிகர்கள் கடவுளாகவே இளையராஜாவை பாவித்து வருகிறார்கள். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட சில சமயங்களில் சுவாமி நலமா என்று கேட்பாராம். இப்படி எல்லோர் மனதிலும் மிகப்பெரிய உயரத்தில் இளையராஜா இருக்கிறார்.

Also Read : ரஜினியை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய இளையராஜா.. கடுப்பில் தலை குனிந்த படி காரில் சென்ற சூப்பர் ஸ்டார்

ஆனால் ஒரு காலகட்டத்தில் இளையராஜா வரும்போது அவருக்கு முன் கால் மேல் கால் போட்டு தம்மடித்துள்ளார் நடிகர் ஒருவர். இதை பார்த்து மொத்த யூனிட்டுமே ஆச்சரியத்தில் உறைந்ததாம். அதாவது தங்க தட்டில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகர் அரவிந்த்சாமி.

சின்னத்திரை தொடர்கள் மற்றும் வெள்ளி திரையில் சில கதாபாத்திரங்கள் நடித்து மிகவும் பிரபலமானவர் டெல்லி குமார். இவருடைய மகன் தான் அரவிந்த்சாமி. இந்நிலையில் இவர் நடிப்பில் உருவான தாலாட்டு படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார்.

Also Read : இளையராஜா இசை அமைத்தல் மட்டுமே படத்தை இயக்குவேன்.. கங்கணம் கட்டிக்கொண்டு 10 படத்திற்கு காரியத்தை சாதித்த ஒரே இயக்குனர்

அந்த சமயத்தில் படத்திற்கு இசையமைக்க வரும்போது அரவிந்த்சாமி தம் அடித்துக் கொண்டு இருந்துள்ளார். இதனால் அங்கு உள்ளவர்கள் அனைவரும் அரவிந்த்சாமிடம் இவ்வாறு செய்யலாமா என்று கேட்டுள்ளனர். ஆனால் பிறவி பணக்காரன் என்பதால் நான் தம்மடிப்பதனால் அவருக்கு என்ன பிரச்சனை என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் பிறகு தான் இளையராஜாவின் பெருமையை அரவிந்த்சாமி தெரிந்து கொண்டுள்ளார். ஆனாலும் அதன் பிறகு அரவிந்த்சாமி பெரும்பான்மையாக மணிரத்தினம் இயக்கத்தில் தான் நடிக்க ஆரம்பித்தார். அதனால் ஏ ஆர் ரகுமான் தான் அவரது படத்திற்கு இசையமைத்தார்.

Also Read : AR ரகுமானுக்கு பாடியதால் பழிவாங்கிய இளையராஜா.! பகிரங்கமாக உண்மையை போட்டு உடைத்த பிரபல பாடகி

Next Story

- Advertisement -