ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ரீல் ஜோடி ரியல் ஜோடியாக முடிந்த திருமணம்.. விஜய் டிவிக்கு வந்தாலே இப்படி தானா?

விஜய் டிவி பிரபலங்கள் ஒரு தொடரில் இணைந்து நடித்தால் உடனே திருமணம் செய்து கொள்வது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ராஜா ராணி தொடர் மிகவும் பிரபலமானது.

இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதேபோல் விஜய் டிவியில் ஒன்றாக நடித்த பல நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.

Also read:சிங்கப்பூரில் உலா வரும் ஆலியா மானசாவின் வைரலாகும் புகைப்படம்..! மெர்சலான ரசிகர்கள்

தொடர்ச்சியாக இப்போது ரீல் ஜோடியாக நடித்த விஜய் டிவி பிரபலங்கள் இப்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். அதாவது சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் நடித்த விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.

ஏனென்றால் ஒரு தொடரில் நடித்தால் உடனே காதலித்த திருமணம் செய்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. ஆனாலும் இவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நீண்ட காலம் வாழ வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து மழையை அளித்து வருகிறார்கள். குறிப்பாக விஜய் டிவியில் தான் பெரும்பாலான காதல் திருமணங்கள் நடைபெறுகிறது.

Also read: இப்போதைக்கு கல்யாணம் இல்ல.. அமீர்-பாவனி லிவிங் டுகெதர் சீக்ரெட் இதுதான்

விஜய் டிவியே டிஆர்பிக்காக இது போன்று செய்கிறதா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. மேலும் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா திருமண புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இவர்களைத் தொடர்ந்து அடுத்த விஜய் டிவியில் ரீல் யார் ரியல் ஜோடியாக மாறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய் டிவியின் மற்றொரு ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறி உள்ளது.

vishnukanth-samyukta
- Advertisement -

Trending News