பிளான் பண்ணாம களத்தில் இறங்கி தோற்றுப் போன ரஜினி படம்.. வெற்றி இயக்குனரையே சாய்த்த நடிகையின் ராசி

Rajinikanth: வடிவேலு ஒரு காமெடியில் பிளான் பண்ணி எதையும் பண்ணனும் என ரொம்ப யதார்த்தமாக சொல்லி இருப்பார். அது தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களுக்கு பொருந்தி விடும். எந்த ஒரு பிளானும் பண்ணாமல் கதையைத் தேர்ந்தெடுத்து, அதற்கு நட்சத்திரங்களையும் தேர்ந்தெடுத்து மொத்த பணத்தையும் போட்டு கடைசியில் தயாரிப்பாளர் தலையில் துண்டு போடும் அளவுக்கு விவகாரம் பெருசாகிவிடும்.

அப்படி பிளான் பண்ணாமல் செய்த ஒரு விஷயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் ஒன்று பெரிய அளவில் தோல்வி அடைந்ததோடு சினிமா ரசிகர்கள் கடுமையாக கேலி செய்யும் அளவுக்கு ஆனது. இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக சினிமாவில் அதிகரித்திருக்கும் பான் இந்தியா ஆசைதான். எல்லா மொழிகளிலும் ரிலீஸ் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு, எக்கச்சக்க நடிகர்களை நடிக்க வைத்து தேவையில்லாத ஹைட் ஏற்றுவதால் படம் பெயிலியர் ஆகிவிடுகிறது.

ரஜினியின் சினிமா கேரியரில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் தான் சந்திரமுகி. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ரஜினி ஒரு பெரிய தோல்வியில் இருந்து மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது இந்த படத்தின் வெற்றி மூலம் தான். கடந்த 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வெற்றி பெற்ற சந்திரமுகி படம் தான் அது. அந்த படம் எந்த அளவுக்கு ஹிட்டானதோ அதை மொத்தமாக கெடுத்து விட்டது இரண்டாம் பாகம்.

Also Read:ஸ்டைலே இல்லாமல் ரஜினியின் மறக்க முடியாத 5 படங்கள்.. தம்பி தங்கைக்காக ஓடாய் தேய்ந்த சூப்பர் ஸ்டார்

ராகவா லாரன்ஸ், கங்கணா ரணாவத், லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, மகிமா நம்பியார், ராதிகா, வடிவேலு என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு இந்த படம் உருவானது. இவ்வளவு நட்சத்திரங்களை ஒன்று சேர்த்தது தான் படத்தின் மிகப்பெரிய தோல்விக்கும் காரணமாக அமைந்து விட்டது. சரியான கதாபாத்திரங்கள் தேர்வு இல்லாததால் அந்தந்த கேரக்டர்கள் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கவில்லை.

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மெயின் கேரக்டர் ஆன சந்திரமுகியின் கதாபாத்திரத்தில் கங்கணா நடித்திருந்தார். ஏற்கனவே அவருக்கு பாலிவுட்டில் தோல்விக்கு மேல் தோல்வி படங்கள் தான் குவிந்து கிடக்கின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்காக அவரை தமிழுக்கு அழைத்து வந்து இப்படி ஒரு வெயிட்டான கேரக்டரை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.

இயக்குனர் பி வாசுவை பொருத்தவரைக்கும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுக்கக் கூடியவர். சில நேரங்களில் அவருடைய படங்கள் சறுக்கினாலும் ஆவரேஜ் வெற்றியை கொடுத்து விடும். ஆனால் சந்திரமுகி 2 ஒட்டு மொத்தமாக அவருக்கு பெரிய தோல்வியை கொடுத்தது. இதற்கு கங்கனாவின் ராசியும் ஒரு காரணம் என படம் ரிலீஸ் ஆன சமயத்தில் பேசப்பட்டது.

Also Read:லால் சலாம் படத்தால் அஜித்துக்கு ஏற்பட்ட தலைவலி.. கப்பு சிப்பின்னு வாய மூடிட்டு வேடிக்கை பார்க்கும் லைக்கா

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்