வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சுயலாபத்திற்காக மௌனம் காக்கும் ஹீரோக்கள்.. குஸ்கா கார்த்தி என வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை

Blue Sattai Maran, Karthi: சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர்களை வறுத்தெடுக்கும் படியான பதிவுகளை தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது காவேரி பிரச்சனை வேகம் எடுத்த நிலையில் தமிழ் ஹீரோக்கள் பலரும் மௌனம் காத்து வருகிறார்கள்.

ஆனால் கர்நாடகாவில் தங்களது மக்களுக்காக நடிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் வாயை திறக்காமல் இருப்பதற்கான காரணம் அவர்களது படங்கள் பான் இந்திய மொழி படமாக வெளியாகி வருகிறது. இப்போது அவர்களை பகைத்துக் கொண்டால் வசூலில் பெரிய பாதிப்பு ஏற்படும்.

Also Read : வாய்க்கு பூட்டு போட்ட மாஸ் ஹீரோக்கள்.. பூதாகரமாக வெடித்த விவகாரம், ஒருத்தர் விடாம பங்கம் செய்யும் ப்ளூ சட்டை

இதை கருத்தில் கொண்டு தான் சுயநலமாக ஹீரோக்கள் இருக்கிறார்கள். இந்த சூழலில் நடிகர் கார்த்தியை பற்றி ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள பதிவு இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது பிரியாணி படத்தின் கதாநாயகன் கார்த்தி தமிழ் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக உழவன் அறக்கட்டளை தொடங்கினார்.

அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு உழவன் விருது கொடுத்தும் கௌரவித்து வந்தனர். ஆனால் இப்போது காவிரி பிரச்சனையில் நடிகர் கார்த்தி பிரியாணி போல் செயல்படாமல் அமைதியாக குஸ்கா போல் செயல்படுகிறார். இதற்கு காரணம் அவருடைய நடிப்பில் வரவிருக்கும் படங்கள் கர்நாடகாவில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வெளியிட வேண்டும் என்பதற்காகத்தான்.

Also Read : பத்து பைசா கூட மூளையை செலவழிக்காத இறைவன் படக்குழு.. மொத்தமாக டேமேஜ் செய்த ப்ளூ சட்டை

அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் சித்தா பட ப்ரமோஷனுக்காக சித்தார்த் பெங்களூருக்கு சென்றபோது கர்நாடக அமைப்பினர்களால் வெளியே அனுப்பப்பட்டார். இந்த பிரச்சனைக்கு கூட கார்த்தி குரல் கொடுக்கவில்லை. இதில் நடிகர் சங்கத்தில் உயர் பதவியில் வேறு கார்த்தி இருக்கிறார்.

மேலும் தமிழக விவசாயிகள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. சக நடிகர் சித்தார்த்தையும் ஆதரிக்க விரும்பவில்லை குஸ்கா கார்த்தி என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார். மேலும் ரசிகர்களுக்கும் ஹீரோக்கள் இவ்வாறு மௌனம் காத்து வருவது எரிச்சலை தான் அடையச் செய்திருக்கிறது.

blue-sattai-maran-karthi
blue-sattai-maran-karthi

Also Read : சைலன்டாக சம்பவம் பண்ணும் கார்த்தி.. அடேங்கப்பா கைவசம் இத்தனை படங்களா?

- Advertisement -

Trending News