உச்ச நட்சத்திரங்களை பார்த்தாலே வெறுப்பாகும் இயக்குனர்.. ரஜினி, கமல் இல்லாமலேயே கொடுத்த ஹிட் படங்கள்

சினிமாவை பொறுத்த வரைக்கும் எந்த ஒரு நடிகர்களுமே ஆரம்ப காலத்தில் இருந்தது போல் வெற்றியடைந்த பிறகு இருக்க மாட்டார்கள். ஒரு சில ஹீரோக்களே அதற்கு விதிவிலக்கு போல் ரொம்பவும் எளிமையாக நடந்து கொள்வார்கள். இது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் எல்லா மொழி சினிமாவிலும் நடக்கும் கதைதான். இயக்குனர்களும் அந்த ஹீரோக்களுக்கு ஏற்றது போல் தங்களை மாற்றிக் கொள்ளும் கட்டாயத்தில் மாறிவிடுகிறார்கள்.

ஹீரோக்களுக்காக கதையை மாற்றுவது, சக கலைஞர்களை மாற்றுவது என உச்ச நட்சத்திரங்களிடம் மொத்தமாய் சரணடையும் இயக்குனர்களும் இருக்கிறார்கள். ஆனால் பிரபல வெற்றி இயக்குனர் ஒருவர் இதற்கெல்லாம் அடிபணியாமல் இருந்திருக்கிறார். மேலும் உச்ச நட்சத்திர ஹீரோக்களை பார்த்தாலே அவருக்கு கோபம் வருமாம். அந்த அளவுக்கு வெறுத்திருக்கிறார்.

Also Read:மலையாள சினிமாவில் ரஜினி நடித்த 2 படங்கள்.. கமலுடன் இணைந்து போட்ட வெற்றி கூட்டணி

பெரிய ஹீரோக்கள் என்றாலே இயக்குனரின் இஷ்டப்படி நடிக்க மாட்டார்கள், சரியான நேரத்திற்கு சூட்டிங்கிற்கு வர மாட்டார்கள், சம்பளமும் ரொம்ப அதிகமாக கேட்பார்கள் என்று அவர்களை தன் படத்தில் நடிக்க வைக்காமலேயே இருந்திருக்கிறார் இந்த இயக்குனர். உண்மையை சொல்ல போனால் அவருடைய படங்களில் உச்ச நட்சத்திரங்கள் என்று யாருமே நடித்திருக்க மாட்டார்கள்.

இருந்தாலும் இந்த இயக்குனர் பெரிய நடிகர்கள் இல்லாமலேயே தன்னுடைய எல்லா படத்தையும் இயக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் வெற்றி கொடி கட்டி பறந்து கொண்டிருந்த காலத்திலேயே இவர் அவர்கள் இருவரையும் வைத்து இயக்காமலேயே பல ஹிட் படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக வலம் வந்திருக்கிறார்.

Also Read:ஏவிஎம் மியூசியத்தில் கெத்தாக நிற்கும் ரஜினி சிலை.. வருகை தந்து சிறப்பித்த கமல்

80 மற்றும் 90 களின் காலகட்டத்தில் குடும்பப்பாங்கான கதைகளை எளிமையாக திரையில் சொல்லி வெற்றி பெற்ற விசு தான் அந்த இயக்குனர். இவர் படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் அந்த படத்தில் வரும் முக்கியமான கேரக்டரை அவரே ஏற்று நடித்து இருக்கிறார். இதில் சுவாரசியம் என்னவென்றால் இவர் கமல் மற்றும் ரஜினியை வைத்து இயக்கவில்லை என்றாலும் அவர்களுடைய படங்களில் நடித்திருக்கிறார்.

சம்சாரம் அது மின்சாரம், குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு போன்ற படங்கள் எல்லாம் விசுவின் சிறந்த கதைகளுக்கு உதாரணம். குடும்பங்களை சுற்றி நடக்கும் ஏற்றத்தாழ்வுகளை மையமாக வைத்து இவர் நிறைய ஹிட் படங்களை கொடுத்ததோடு நிறைய சமூக கருத்தையும், பகுத்தறிவையும் தன்னுடைய வசனங்களின் மூலம் சொல்லி இருக்கிறார்.

Also Read:நாத்திகனாக இருந்தும் மூட நம்பிக்கையில் மூழ்கியிருக்கும் கமல்.. பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழியா

Next Story

- Advertisement -