சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

ரஜினியுடன் ஜோடி போட 30 வருடமாக போராடிய நடிகை.. ஆசையை தீர்த்து வைத்த மகள்

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடி சேர வேண்டும் என்பது தமிழ் சினிமாவில் 90 ஹீரோயின்களிலிருந்து இப்போது உள்ள ஹீரோயின் வரைக்கும் மிகப்பெரிய கனவாக இருக்கிறது. அவருடன் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்று ஒவ்வொரு நடிகைகளும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியும் தொடர்ந்து ஒரே ஹீரோயின் உடன் நடிக்காமல் படத்திற்கு படம் ஹீரோயின்களை மாற்றிவிடும் பழக்கமுடையவர்.

ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரைக்கும் இளம் ஹீரோயின்களுடன் நடித்துக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அதை அப்படியே குறைத்துக் கொண்டார். சமீபத்தில் அவர் ஜோடி சேரும் இளம் ஹீரோயின்கள் என்றால் அது நயன்தாரா மற்றும் அடுத்த திரைக்கு வரவிருக்கும் ஜெயிலர் படத்தில் தமன்னா தான். ஜெயிலரில் ரஜினியின் பழைய வில்லி ரம்யா கிருஷ்ணனும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Also Read:மாவட்ட எஸ்.பி-யாக ரவுண்டு அடிக்க போகும் ரஜினி.. தலைவரின் அடுத்த படத்திற்கான புது அப்டேட்

தன்னுடன் ஜோடி போட்ட மீனா, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணனுக்கு தன் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். சமீபத்தில் இந்த லிஸ்டில் சேர்ந்து இருக்கிறார் 90ஸ் ஹீரோயின் ஒருவர். ஆனால் இவர் அந்த காலகட்டத்தில் ரஜினியுடன் நடித்ததே இல்லை. ஆனால் ரஜினியுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று ஒரு மிகப்பெரிய ஆசையை வைத்திருந்திருக்கிறார் இந்த நடிகை.

90களின் காலகட்டத்தில் செந்தூரப்பூவே, அக்னி நட்சத்திரம், இணைந்த கைகள், சூரசம்ஹாரம் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை தன் வசம் கவர்ந்திழுத்தவர்தான் நடிகை நிரோஷா. இவருக்கு ரஜினியுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை இருந்திருக்கிறது. ஆனால் அப்போது ரஜினி உச்ச நட்சத்திரம் என்பதால் நிரோஷாவால் அவருடன் ஜோடி சேர முடியாமலேயே போய்விட்டது. தற்போது அவருடைய ஆசை நிறைவேறி இருக்கிறது.

Also Read:போலீஸ் அதிகாரியாய் சூப்பர் ஸ்டார் கலக்கிய 5 படங்கள்.. 27 வருடத்திற்கு பிறகு ரஜினி ஏற்ற கதாபாத்திரம்

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் லால் சலாம். இந்த படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடிப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த கேரக்டருக்கு தான் நிரோஷா ஜோடியாக நடிக்க இருக்கிறார். நடிகை நிரோஷாவின் முப்பது வருட கனவை ரஜினியின் மகள் நிறைவேற்றி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக 90 ஹீரோயின் ஈஸ்வரி ராவ் நடித்திருந்தது மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அது போல் ரஜினி மற்றும் நிரோஷாவின் கெமிஸ்ட்ரியும் தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேற்கப்படுகிறதா என்பது படம் ரிலீசான பின்பு தான் தெரியும். நிரோஷா தான் நடித்த கடந்த சில படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்து விட்டதால் ரஜினிக்கு ஜோடி என்பது எப்படி எடுபடும் என்று தெரியவில்லை.

Also Read:விஜய் சேதுபதிக்கு ரஜினி கொடுத்த தரமான அட்வைஸ்.. ஓசில வேலை பார்த்தா காணாம போயிடுவ

- Advertisement -spot_img

Trending News