லியோவை ஓவர் டேக் செய்ய போட்ட பிளான்.. எதிர்பார்ப்பை மிரள வைக்கும் ஏகே 62

விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் ஆர்வமுடன் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். இதுவே எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து அவ்வப்போது வெளியாகும் போட்டோக்களும் ரசிகர்களை குஷிபடுத்திக் கொண்டிருக்கிறது.

இப்படி மீடியாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கும் லோகேஷ் இந்த படத்தின் மூலம் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இது ஒரு புறம் இருந்தாலும் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்திற்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.

Also read: அஜித்-விஜய்யால் அல்லோலப்படும் டாப் இயக்குனர்கள்.. ஈகோவால் அழியும் தமிழ் சினிமா

சினிமா ரசிகர்கள் தான் அவ்வப்போது இந்த திரைப்படம் குறித்த ஏதாவது ஒரு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏகே 62 திரைப்படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கப் போகிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. ஆனால் பட குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது பற்றியும் எந்த செய்தியும் வெளிவரவில்லை.

இதனாலேயே அஜித் ரசிகர்கள் மிகப்பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் இதற்கு முக்கிய காரணம் ஏகே 62 திரைப்படத்தை லியோவை மிஞ்சும் அளவுக்கு கொண்டு போக வேண்டும் என்பதுதான் தயாரிப்பாளரின் திட்டமாம். அதற்காகவே ஸ்பெஷலான ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிடுவதற்கு அவர் பிளான் செய்திருக்கிறார்.

Also read: துணிவுடன் கனெக்ட்டாகும் ஏகே 62 டைட்டில்.. மீண்டும் சம்பவம் செய்ய போகும் அஜித்

ஏனென்றால் சமீபத்தில் லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி பட்டையை கிளப்பி இருந்தது. தற்போது அதையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு ஒரு விஷயத்தை செய்ய லைக்கா நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. ஆனால் அஜித் ப்ரோமோ வீடியோ வெளியிட்டால் ரொம்பவும் தாமதம் ஆகிவிடும். அதனால் படத்தின் பெயரை மட்டும் அறிவித்துவிட்டு நேரடியாக படப்பிடிப்பை ஆரம்பித்து விடலாம் என்று கூறியிருக்கிறார்.

இப்படி தயாரிப்பாளர் ஒரு பிளான் போட்டிருக்கும் நிலையில் அஜித் அதை வேறு மாதிரி கூறியிருப்பது பட குழுவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் அஜித்தின் முடிவுப்படி விரைவில் படத்தின் பெயரை படு மாஸாக அறிவித்துவிட்டு ஷூட்டிங்கை ஆரம்பிக்க இருக்கின்றனர். இதுதான் தற்போது திரையுலகின் சூடான செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

Also read: ரிவெஞ் எடுத்தே ஆவேன்.. அஜித்தை தோற்கடிக்க விக்னேஷ் சிவன் போடும் கூட்டணி

Next Story

- Advertisement -