சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

குவாட்டர், கோழி பிரியாணி, 8 கோடி வசூல்.. கேவலமான வேலை செய்த தேசிய விருது தயாரிப்பாளர்!

பிரபல நடிகரின் படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வசூல் வேட்டையாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படத்தை விமர்சித்து அனைத்து சினிமா விமர்சகர்களும் நெகட்டிவாக தான் கூறி வருகிறார்கள்.

ஆனால் எப்படி வசூல் மட்டும் கோடிகளை குவித்து வருகிறது என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வந்தது. சமீபத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் அவர்களது ரசிகர்கள் மூலம் படத்தின் வசூல் அதிகரித்திருந்தது.

Also Read: அரைச்ச மாவையே அரைத்து புளிக்க வைத்த முத்தையா.. விருமன் ஒரு நேர்மையான விமர்சனம்

ஆனால் அந்த அளவுக்கு இந்த நடிகருக்கு ரசிகர்களும் அதிகம் கிடையாது. மேலும் இந்த நடிகரின் படத்தில் முதல்முறையாக நடிகை ஒருவர் அறிமுகமாகி உள்ளதால் படம் பட்டையைக் கிளப்புகிறது என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் என்ன என்ற உண்மையை புட்டுப்புட்டு வைத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

அரசியலில் ஓட்டு போடுவதற்காக மக்களிடம் குவாட்டர், கோழி பிரியாணியும் கொடுத்து ஓட்டுக்களை வாங்கிவிடுவார்கள் அரசியல்வாதிகள். அதே உத்தியை இப்படத்தில் பயன்படுத்தியுள்ளார் தேசிய விருது தயாரிப்பாளர். அதாவது படத்தைப் பார்க்க வரும் ரசிகர்களிடம் குவாட்டர், கோழி பிரியாணி வாங்கி கொடுத்துள்ளனர் படக்குழு.

Also Read: இப்படி ஒரு மட்டமான வெற்றி தேவையா.? விருமன் படக்குழுவை கண்டபடி பேசிய பயில்வான்

அவ்வாறு படத்தை பார்த்த பின்பு தியேட்டரில் இருந்து வெளியே வரும்போது படத்தைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று சொல்லியுள்ளனர். இதைப் பார்த்த மக்கள் குடும்ப படம் நன்றாக இருக்கும் என திரையரங்குகளில் வந்து பார்த்த பின்பு தான் தெரிகிறது படம் படு மொக்கையாக உள்ளது என்று பயில்வான் விமர்சித்துள்ளார்.

ஆனால் இப்போது முதல் நாள் வசூல் 8 கோடி, இரண்டாவது நாள் வசூல் 10 கோடி என படம் வெற்றியடைந்தாகக் கூறி படக்குழு சக்சஸ் பார்ட்டி கொண்டாடி வருவதாக கூறியுள்ளார். இந்த வெட்டி பந்தா அந்த தேசிய விருது தயாரிப்பாளருக்கு தேவையா என வறுத்து எடுத்துள்ளார் பயில்வான்.

Also Read: கிராமத்து லுக்கில் நடித்து மார்க்கெட்டை எகிரி பிடித்த 5 நடிகைகள்.. அதிதிக்கு கைகொடுக்குமா விருமன்?

- Advertisement -

Trending News