வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பல கோடி பட்ஜெட், பிரம்மாண்ட படம்.. வாய்ப்புக்காக இறங்கி வந்த சிம்பு

சில வருடங்களுக்கு முன்பு வரை சிம்புவின் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தது. உடல் எடை அதிகரித்து விட்டார் என்றும் படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை என்றும் பல குற்றச்சாட்டுகள் இருந்தது. இதையெல்லாம் வைத்து அவர் இனிமேல் படங்களில் நடிக்க மாட்டார். அவருடைய கெரியர் அவ்வளவுதான் என்ற ரீதியில் அனைவரும் பேசி வந்தனர்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு உடல் எடையை குறைத்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள சிம்புவை திரையுலகமே வியந்து தான் பார்க்கிறது. அதிலும் பத்து தல திரைப்பட விழாவில் அவர் இனிமேல் நீங்கள் எதிர்பார்த்தது போல் நான் இருப்பேன். அதற்கு மேலேயும் உங்களை ஆச்சரியப்படுத்துவேன் என்று கூறியிருந்தார்.

Also read: கொள்கையை மாற்றிக் கொண்ட சிம்பு.. தயாரிப்பாளருக்கு வைத்த வேண்டுகோள்

இதையெல்லாம் வெறும் மேடைப் பேச்சுக்காக அவர் பேசவில்லை. தற்போது சொன்ன வார்த்தையை காப்பாற்றும் முயற்சியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். அதாவது சிம்பு கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்திருந்தது.

பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்திற்காக சிம்பு ஒரு அதிரடியான விஷயத்தை செய்திருக்கிறார். அதாவது அவர் தற்போது தன் சம்பளத்தை கணிசமாக குறைத்து இருக்கிறாராம். இது கமலுக்காக செய்த விஷயம் என்று கூறப்பட்டாலும் அடுத்தடுத்த திரைப்படங்களிலும் சிம்பு இதையே தான் பின்பற்ற இருக்கிறாராம்.

Also read: எக்ஸை திரும்ப காட்டி கதி கலங்க செய்த 5 படங்கள்.. மனதை கனக்க செய்த கார்த்திக் ஜெஸி காதல்

தற்போது அனைவரும் பான் இந்தியா, பிரம்மாண்ட பட்ஜெட் போன்ற படங்களில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர். அந்த வகையில் சிம்புவும் தன்னை வைத்து பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக படம் எடுத்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்ள தயார் என தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளாராம்.

இதுவரை முன்னணியில் இருக்கும் எந்த நடிகரும் இதுபோன்று சம்பளத்தை குறைத்துக் கொண்டது கிடையாது. ஒரு படம் வெளிவந்தாலே இரு மடங்காக தங்கள் சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள். ஆனால் சிம்பு தன்னுடைய வளர்ச்சிக்காக இப்படி ஒரு விஷயம் செய்திருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது. இதன் மூலம் அவர் அடுத்தடுத்த படங்களால் உச்சத்திற்கு சென்று விடுவார் என்றும் பேசி வருகின்றனர்.

Also read: அஜித்துக்கு தீனா படம் எப்படியோ அப்படித்தான் சிம்புவுக்கும் பத்து தல.. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு கிளப்பிய தயாரிப்பாளர்

- Advertisement -

Trending News