வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

சம்பளம், அசுர வில்லன் என பகத் பாசிலை வளர்த்த படம்.. தலைவர் 170க்கு அடித்தளம் போட்ட கதாபாத்திரம்

Fahad Fazzil – Thalaivar 170: தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகராக இப்போது இருப்பவர் தான் நடிகர் பகத் பாசில். இவரை நடிப்பு அரக்கன் என சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பகத் தமிழ் சினிமாவில் நடித்த படங்கள் எல்லாமே கவனத்திற்குரியவை என்றாலும் சமீபத்தில் அவர் நடித்த மாமன்னன் படம் அவரை வேறொரு கட்டத்திற்கு நகர்த்தி சென்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

எப்படி இந்த மனுஷன் இப்படி நடிக்கிறார் என அத்தனை பேரும் வாயை பிளக்கும் அளவிற்கு இவருடைய மதிப்பு இருக்கிறது. சமீபத்தில் பகத் பாசில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 170 படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். மாமன்னன் படத்தின் ரிசல்ட் தான் இதற்கு காரணம் என சொன்னால் கண்டிப்பாக கிடையாது. அந்த படத்திற்கு முன்பே தன்னை ஒரு மகா நடிகனாக வேறொரு படத்தில் நிரூபித்து விட்டார் பகத்.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு எதிரான கேரக்டரில் பகத் பாசில் எஸ் பி பன்வார் சிங் என்னும் கேரக்டரில் நடித்து இருந்தார். வழுக்கை தலை, கண்ணாடி என வித்தியாசமான கெட்டப்புடன் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பையும் காட்டி மிரட்டி இருந்தார்.

வில்லத்தனம் மற்றும் நக்கல் கலந்த தொனியில் இவர் அல்லு அர்ஜுனிடம் பார்ட்டி லேதா புஷ்பா என கேட்கும் வசனம் இன்று வரை சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கிறது. இந்த படத்தில் இவர் நடித்த கேரக்டர் தான் இப்போது தென்னிந்திய சினிமாவில் இவருக்கு கிடைத்த ரீச்சின் முக்கிய காரணமாக இருக்கிறது. இதன் மூலம் தான் ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகத்திற்கும் பகத் பாசில் என்னும் நடிப்பு அரக்கன் அறிமுகமானார்.

தமிழில் ஏற்கனவே வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் மற்றும் மாமன்னன் போன்ற படங்களில் நடித்த பகத் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து அவருடைய 170 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்காக அவருக்கு 10 கோடி சம்பளமாக கொடுக்கப்பட உள்ளது. இதுதான் அவர் இத்தனை வருடங்களில் வாங்கிய உச்ச சம்பளம் என சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். குறுகிய கால் சீட்டில் இந்த படம் விரைவில் எடுத்து முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. வழக்கம் போல ரஜினியின் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார்.

- Advertisement -

Trending News