கழுவுற மீனில் நழுவுற மீனாக இருந்த தொகுப்பாளினி.. அரசியல்வாதிக்கு தண்ணி காட்டிய சம்பவம்

பொதுவாக சினிமா பிரபலங்களை தாண்டி சின்னத்திரை பிரபலங்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் வருவதை பல நடிகைகள் வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் தொகுபாளினியாக பணியாற்றிய நடிகை ஒருவர் மீது அரசியல்வாதிக்கு ஆசை ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தொகுபாளினி தப்பித்து வந்தார். ஏனென்றால் சிலர் இதுபோன்ற அட்ஜெஸ்ட்மெண்டில் இருந்து விதிவிலக்காக இருப்பவர்களும் உண்டு. அவ்வாறு இவரும் திறமை மூலம் தான் ஜெயிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

Also Read : தண்ணிய போட்டு நடுரோட்டில் பரவச நிலையில் ஆடிய நடிகை.. அலேக்காக தூக்கிட்டு போய் வீட்டில் பார்க் செய்த நடிகர்

ஆனால் அரசியல்வாதியின் விசுவாசிகள் இவரை சும்மாய் விடுவதாய் இல்லை. அவர் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். மேலும் ஒரு நாள் முக்கிய நிகழ்ச்சிக்காக தொகுப்பாளினி சென்றிருந்த போது அரசியல்வாதியின் விசுவாசிகள் வெளியில் காத்திருப்பது இவருக்கு தெரிந்து விட்டது.

கண்டிப்பாக இன்று தன்னை சும்மா விட மாட்டார்கள் என்று தெரிந்து கொண்ட தொகுப்பாளினி அந்த அரசியல்வாதியின் எதிர்க்கட்சி தலைவருக்கு போன் செய்து விஷயத்தை கூறிவிட்டார். உடனே அவர் சம்பவ இடத்திற்கே வந்து அரசியல்வாதிகளின் விசுவாசிகளிடம் பேசி அனுப்பி வைத்து விட்டாராம்.

பின் தொகுப்பாளினியையும் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். அதன் பிறகு நேரடியாகவே அந்த அரசியல்வாதியிடம் சென்று இனிமேல் அந்த தொகுப்பாளினி பக்கட்டு தலையே வைக்க கூடாது என எச்சரித்து விட்டுள்ளார். பலர் இதில் சிக்கிக் கொள்ள கழுவுற மீனில் நழுவுற மீனாக நடிகை புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு இருக்கிறார்.

Also Read : இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்புகளை வாரிய நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த லீலைகள்

Next Story

- Advertisement -