புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதை.. நயன் எண்ட்ரியால் மொத்தமாய் மாறி போன படம்

Actress Nayanthara: தென்னிந்திய சினிமா உலகின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நிரூபித்தவர். இவர் தனி கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த பிறகு நிறைய நடிகைகளும் தங்கள் மேல் நம்பிக்கை வைத்து அதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

நயன்தாரா ஆரம்ப காலத்தில் ஏனோதானோவென்று கதைகளை தேர்வு செய்து நடித்திருந்தாலும், தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் முழுக்க முழுக்க தனக்கு முக்கியத்துவம் கொடுத்த கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்தார். இதனாலேயே இவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று தென்னிந்திய சினிமா உலகம் கொண்டாடியது. அவரும் அந்தப் பெயரை காப்பாற்ற தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

Also Read:ரஜினியை சந்தோஷப்படுத்த விஜய்யை அசிங்கப்படுத்திய தமன்னா.. இனி உங்களுக்கு வாய்ப்பு இல்ல அம்மணி

ஆனால் நயன்தாரா எப்படி கதைகளில் தனக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதேபோல் ரசிகர்களின் கவனமும் தன் மீது மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். படங்களில் தனக்கு தங்கையாக, தோழியாக நடிக்க வேண்டியவர்களை கூட இவர் தான் முடிவு செய்து ஓகே சொல்ல வேண்டும், அந்த அளவுக்கு தனித்துவத்தை விரும்புபவர்.

அப்படித்தான் இயக்குனர் ஒருவர் முழுக்க முழுக்க ஹீரோவுக்காக எழுதிய கதையில், நயன்தாரா என்ட்ரி ஆனதும் அந்த கதை அப்படியே அவருக்காக மாற்றப்பட்டு விட்டது. நயன் தனி கதாநாயகியாக நடித்து அந்தப் படமும் வெற்றி பெற்றது. ஒரு முன்னணி ஹீரோ, ஒரு வளர்ந்து வரும் ஹீரோ இருவரும் அந்த படத்தில் இருந்தும் கதை மொத்தமும் நயன்தாராவை சுற்றியே அமைந்தது.

Also Read:ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு போட்டியாக தொடர் பிளாப் கொடுக்கும் ரீ என்ட்ரி குயின்.. இப்படியே போனா தல தப்பாது

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இமைக்கா நொடிகள் திரைப்படம் தான் அது. முழுக்க முழுக்க ஹீரோவை மனதில் வைத்து, தொடர் கொலைகளின் காரணங்களை கண்டுபிடிக்கும் திகில் திரைப்படமாக எழுதப்பட்ட இந்த கதையை கடைசி நேரத்தில் இயக்குனர் நயன்தாராவுக்காக ஹீரோயின் சப்ஜெக்டாக மாற்றி இருக்கிறார்.

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, நயன்தாராவின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது. விஜய் சேதுபதி இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பார். அதர்வா படம் முழுக்க இருந்தாலும் அவருக்கு பெரிதாக இந்த படத்தில் நடிக்க வாய்ப்புகள் இல்லை. அது போல் தான் நடிகை ராஷிக் கண்ணாவும் படத்தில் பெயருக்கு ஒரு ஹீரோயின் என்பது போல் வந்து போவார்.

Also Read:நயன்தாராவை விட பல கோடி அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை.. சில நிமிடத்திற்கு மட்டும் இத்தனை கோடியா.?

 

- Advertisement -

Trending News