வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

நடிப்பில் சிவாஜியை தூக்கி சாப்பிட்ட நடிகர்.. காட்சிகளை தூக்க நினைத்த இயக்குனர், நடிகர் திலகம் கொடுத்த பதிலடி

தமிழ் சினிமாவில் நடிக்க வரும் பெரும்பாலான ஹீரோக்களின் ரோல் மாடலாக இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். சிவாஜியின் வசனங்களை பேசி சினிமாவில் வாய்ப்பு பெற்றவர்கள் நிறைய பேர். இன்று வரை சிவாஜியின் படங்களை பிரம்மிப்புடன் தான் தமிழ் சினிமா ரசிகர்களாக இருக்கட்டும், கலைஞர்களாக இருக்கட்டும் பார்க்கிறார்கள். ஒரு பட காட்சியில் எப்படி உணர்வுபூர்வமாக நடிக்க வேண்டும் என்பதற்கு கூட இவர் படத்தைப் பார்த்துதான் கற்றுக் கொள்கிறார்கள்.

இப்படி நடிப்புக்கே அகராதியாக இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒரு நடிகர் நடித்திருக்கிறார். இருவரும் நடித்த ஒரு காட்சியிலேயே சிவாஜியை ஓவர் டேக் செய்து விட்டாராம் அந்த நடிகர். இன்றுவரை அந்த காட்சியை பார்க்கும் பொழுது அந்த நடிகரை தாண்டி சிவாஜியின் மீது யாருடைய கண்களுமே போகாது. அந்த அளவுக்கு நடிப்பில் மிரட்டி இருப்பார்.

Also Read:அன்றைக்கு அண்ணா இல்லைனா, இன்றைக்கு சிவாஜி இல்ல.. அறிஞர் அண்ணாவை நெகிழ்ந்து பேசிய நடிகர் திலகம்

இயக்குனர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் சாவித்திரி நடித்த திரைப்படம் திருவிளையாடல் 1965 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிவாஜி கணேசன் சிவபெருமானாகவும், சாவித்திரி பார்வதி ஆகவும் நடித்திருப்பார். சிவனின் திருவிளையாடல் என்று ஆறு பகுதிகளை கொண்டதாக இந்த படம் இருக்கும்.

இதில் ஒரு பகுதியில் தருமி என்னும் கதாபாத்திரத்தில் நாகேஷ் நடித்திருப்பார். அந்த நாட்டின் மன்னனால் கவிதை போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பொன்னும் பொருளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும். ஏழைப் புலவனாக இருக்கும் தருமி சிவன் கோவிலில் சென்று இதுபற்றி சொல்லி புலம்புவார். அப்போது சிவனான சிவாஜி கணேசன் நேரடியாக தோன்றுவார்.

Also Read:சிவாஜி கணேசன் செய்த செயலால் மிரண்டு போன பாலய்யா.. நடிகர் திலகம்னா சும்மாவா?

இவர்கள் இருவரும் இருக்கும் இந்த காட்சியில் நாகேஷ் தன்னுடைய நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார். ரொம்ப சீரியஸ் ஆக நிற்கும் சிவாஜி அவர் எதிரே புலம்பி தவிக்கும் நாகேஷ். இன்று வரை இந்த காட்சியை பார்க்கும் பொழுது அதில் சிவாஜி கணேசன் இருக்கிறார் என்பதே பார்ப்பவர்களுக்கு மறந்து விடும். நாகேஷ் விட்டு கண்கள் அசையாத அளவுக்கு அவர் நடித்திருப்பார்.

இந்தக் காட்சி படமாக்கப்பட்ட பிறகு அதைப் பார்த்த இயக்குனருக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டதாம். நடிகர் திலகத்தை நாகேஷ் நடிப்பில் ஓவர் டேக் செய்து விட்டார் என்பதை புரிந்து கொண்ட இயக்குனர் நாகராஜன் இதைப்பற்றி சிவாஜி கணேசனிடம் சொல்லியிருக்கிறார். மேலும் இந்த காட்சியை நீக்கிவிடலாம் என்று கூட பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால் சிவாஜி ரசிகர்கள் ரசிக்க வேண்டியது நடிப்பைத்தானே தவிர ஹீரோவை இல்லை என்று கூறி அந்த காட்சியை வைக்க சொன்னாராம்.

Also Read:275 படங்களில் நடித்து சிவாஜி கணேசன் இயக்கிய ஒரே வெற்றி படம்.. டைட்டிலே தெறிக்குது.!

- Advertisement -

Trending News