Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
காத்திருந்தவ புருஷனை தள்ளிட்டு போன நடிகை.. சத்தம் இல்லாமல் நடக்கும் சக்களத்தி சண்டை

டாப் நடிகைகள் இரண்டு பேருக்கு நடக்கும் சண்டை தான் இப்போது பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நடிக்க வந்த வேகத்திலேயே பல வெற்றி படங்களை கொடுத்த நடிகை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த கனவு கன்னியாகவும் மாறிப்போனார்.
தற்போது அக்கட தேசத்திலும் மாஸ் காட்டிக்கொண்டிருக்கும் இந்த நடிகை இளம் ஹீரோ ஒருவருடன் நெருக்கம் காட்டி வருகிறார். இது குறித்து ஏற்கனவே செய்திகள் அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது. ஆனாலும் சம்பந்தப்பட்ட ஜோடி இதுவரை வாய் திறக்காமல் இருக்கின்றனர்.
Also read: வெளிநாட்டில் நடிகருடன் டேட்டிங் செய்து கர்ப்பமான 24 வயது வாரிசு நடிகை.. ரகசியமாக நடந்த கருக்கலைப்பு
இருப்பினும் இந்த ஜோடி டேட்டிங் செய்து வருவது தெரிந்த விஷயம் தான். இந்த சூழலில் காத்திருந்தவ புருஷனை நேத்து வந்தவ தள்ளிட்டு போன கதையாக மாறி இருக்கிறது இந்த ஜோடியின் காதல். அதாவது நடிகையின் காதலன் தற்போது வேறு ஒரு நடிகையின் அரவணைப்பில் இருக்கிறாராம்.
ஏற்கனவே இந்த இரண்டு நடிகைகளுக்கும் திரையுலகில் நீயா நானா போட்டி கடுமையாக நடந்து வருகிறது. அதில் இந்த சக்களத்தி சண்டையும் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்காத நடிகை தன் காதலனை மீட்க போராடி வருகிறாராம்.
Also read: ஹோம்லி நடிகையை பார்த்து ஜொள்ளு விட்ட நடிகர்.. மேலே கை வைத்ததால் செருப்பை தூக்கிய ஹீரோயின்
ஆனாலும் காதலனின் பார்வை புது காதலியின் மேல் தான் அழுத்தமாகப் படிகிறதாம். இதனால் நொந்து போன நடிகை நடிகருடன் பயங்கர சண்டை போட்டு அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இதுதான் இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் காட்டு தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது.
