ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் எழில்.. அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கு

விஜய்டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் இளைய மகன் எழில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் இருக்கும் அமிர்தாவை உயிருக்கு உயிராக காதலித்து அவரை திருமணம் செய்வதற்காக காத்திருக்கிறார். இந்நிலையில் சினிமா துறையில் இருக்கும் எழில், அவர் பணிபுரியும் தயாரிப்பாளரின் மகள் வர்ஷினியை முன்பே தெரியும் என்பதால், கைநழுவிய படம் அவரால்தான் மீண்டும் எழிலுக்கு கிடைத்திருக்கிறது.

இதனால் வர்ஷினிக்கு எழில் நன்றி சொல்கிறார். பிறகு எழிலுடன் பழகுவது வர்ஷினிக்கு மிகவும் பிடித்துப் போனதால், அவருடன் இன்று இரவு தனியாக பைக்கில் ஊர் சுத்த நினைத்த வர்ஷினி தன்னுடைய கார் ரிப்பேர் என சொல்லி எழிலுடன் சேர்ந்து செல்கிறார்.

Also Read: சைடு கேப்பில் சில்லரைத்தனமான சேட்டை செய்யும் கோபி.. விழி பிதுங்கி நிற்கும் பாக்யாவின் குடும்பம்

அப்போது எழிலின் தோளில் கைபோட்டு நெருக்கமாக அமர்ந்திருந்த வர்ஷினியை அமிர்தாவின் மாமனார் பார்த்துவிடுகிறார். அதன்பிறகு இதைப்பற்றி அமிர்தாவிடம் சொன்னபோது அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இருப்பினும் அமிர்தாவின் மாமனார் மாமியாருக்கு மட்டும் எழிலின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. ஒருவேளை அப்பன் மாதிரி மகனும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பார்க்கிறாரா என்று அவர்களுக்குத் தோன்றுகிறது.

Also Read: ராதிகா வீட்டுக்கு இனியாவை கூட்டிட்டு வந்த கோபி.. உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி

ஆனால் எழில் வர்ஷினியிடம் அமிர்தா தன்னுடைய காதலி, அதைத் தாண்டியும் தன்னுடைய மனைவி என்று சொல்கிறார். மேலும் வர்ஷினி எழிலுடன் பேசும்போது, அம்மா மீதும் அமிர்தா மீதும் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து நெகிழ்ந்து போகிறார்.

அதனால் எழிலை மிகவும் பிடித்துப்போக அவருடன் நட்பில் இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். அதன்பிறகு நட்பு காதலாக மாற வாய்ப்பு இருக்கிறது. எழில் எடுக்கும் படத்தின் தயாரிப்பாளரின் மகனான வர்ஷினியை தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் முக்கிய பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு சிக்கல்

அப்படி இல்லை என்றால் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்று தயாரிப்பாளர் கண்டிஷன் போடப் போகிறார். ஆகையால் வர்ஷினியால் நிச்சயம் எழில்-அமிர்தா காதல் பிரியபோகிறது.