வேட்டையனுக்கு சரியான தீனி போடும் இயக்குனர்.. சூப்பர் ஸ்டாருக்காகவே அளவெடுத்து செய்த கேரக்டர்

Rajini-Vettaiyan: ஜெயிலரின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் இப்போது லைக்கா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் தலைவர் பிறந்தநாள் அன்று ஆரவாரமாக வெளியானது. வேட்டையன் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ரஜினிக்கு தீனி போடும் விதமாக இயக்குனர் கதையை உருவாக்கி இருக்கிறாராம்.

டீசரிலேயே ஜெயிலருக்கு இணையான மாசோடு ரஜினி இருந்ததை நாம் பார்த்தோம். அதிலும் அந்த கண்ணாடியை மாட்டும் ஸ்டைல் வேற லெவலில் இருந்தது. வழக்கமாக சூப்பர் ஸ்டார் சிகரெட், பபுள்கம்மை தான் தூக்கி போட்டு வாயில் பிடிப்பார். ஆனால் வேட்டையெனில் அவர் கூலிங் கிளாஸ் மாட்டிய விதமே அலப்பறையாக இருந்தது.

இது போன்ற இன்னும் பல விஷயங்கள் படத்தில் இருக்கிறதாம். அது மட்டுமின்றி இந்த வயதில் ரஜினிக்கு என்ன செய்ய முடியுமோ அதைத்தான் இயக்குனரும் காட்ட இருக்கிறார். சும்மா ஹீரோயிசம் காட்டுவது, பத்து பேரை பறந்து பறந்து அடிப்பது போன்ற சினிமாத்தனங்கள் எதுவும் கிடையாது.

Also read: வசூல் ரீதியாக நான் தான் No.1 என நிரூபித்த ரஜினியின் 5 படங்கள்.. மூணு தலைமுறைனா சும்மாவா!

அதற்கு மாறாக மூளையை பயன்படுத்தி டெக்னாலஜியுடன் ஹீரோயிசம் காட்டும் கேரக்டர் தான் சூப்பர் ஸ்டாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான மசாலாக்களை ஓரங்கட்டி ரஜினிக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து இயக்குனர் செய்து வருகிறாராம்.

சுருக்கமாக சொல்லப் போனால் சூப்பர் ஸ்டாருக்காகவே அளவெடுத்து செய்தது போல் இந்த கேரக்டர் இருக்கும். அதனாலயே ஜெய்பீமை காட்டிலும் இப்படம் பல மடங்கு மாஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே வேட்டையன் என்ற பெயரை கேட்டதுமே ரஜினி ரசிகர்கள் குதூகலமாகிவிட்டார்கள்.

சந்திரமுகியில் ரஜினியின் இந்த கேரக்டருக்கு தான் பயங்கர வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் அப்படி நடித்திருந்தாலும் எடுபடவில்லை. அந்த வகையில் ரியல் வேட்டையன் நான்தான் என சொல்லும் வகையில் சம்பவத்திற்கு தயாராகிவிட்டார் சூப்பர் ஸ்டார்.

Also read: ரஜினி தான் அடுத்த எம்.ஜி.ஆர் என சொன்ன காட்டு ராஜா.. உண்மையைப் போட்டு உடைத்த நக்கீரன்

- Advertisement -spot_img

Trending News