படமே ஓடல ஆனா சூர்யாவுக்கு மண்டகணம் கூடி போச்சு.. ஓவர் அலட்டல், ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பிரபலம்

Suriya: சூர்யா நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் படம் வெளிவந்தது. அதன் பிறகு இரண்டு வருடங்கள் கடந்தும் அவர் படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இதற்கு இடையில் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் நடித்திருந்தார்.

அதற்கு பயங்கர ரெஸ்பான்ஸ் கிடைத்ததை அடுத்து அவரின் கங்குவா படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. வரும் அக்டோபர் 10ஆம் தேதி இப்படம் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்துடன் மோதுகிறது.

இந்நிலையில் சூர்யா பற்றிய ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது சமீபகாலமாக அவருக்கு தலைகனம் அதிகமாகி விட்டதாக வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதை சூர்யாவுக்கு நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களே அதிர்ச்சியுடன் தெரிவித்து இருக்கின்றனர். அவருடைய பேச்சு நடவடிக்கை அனைத்திலும் ஒரு அலட்டல் வந்து விட்டதாகவும் தன்னை அவர் விஜய், அஜித் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு சில விஷயங்களை செய்வதாகவும் பிஸ்மி கூறியுள்ளார்.

ஆட்டிட்யூட் காட்டும் சூர்யா

மேலும் வணங்கான், புறநானூறு படத்திலிருந்து அவர் வெளியேறியதற்கு கூட இதுதான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். எப்படி என்றால் சில வருடங்களுக்கு முன்பு வரை தனக்கு ஹிட் படங்களை கொடுத்து வளர்த்து விட்ட இயக்குனர்களின் படங்களில் நடிக்க முழு ஸ்கிரிப்டையும் கேட்க மாட்டாராம்.

ஆனால் இப்போது கதை விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கிறாராம். ஒரு விதத்தில் இது நல்ல விஷயம் என்றாலும் கெளதம் மேனன், பாலா போன்ற இயக்குனர்களிடமும் அவர் அதே கெடுபிடி காட்டுகிறாராம்.

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் விஜய், அஜித் இருவரின் படங்களுக்கு சர்வதேச அளவில் பிசினஸ் இருக்கிறது. ஆனால் சூர்யாவுக்கு அப்படி கிடையாது. தற்போது கங்குவா தான் இதுவரை இல்லாத அளவுக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது.

அப்படம் வெளிவந்தால் தான் அவருக்கான மார்க்கெட் மதிப்பு தெரியும். ஆனால் அதற்கு முன்பே இவர் கொஞ்சம் திமிருடன் நடந்து கொள்வது விமர்சனங்களை பெற்று வருகிறது. அதிலும் மும்பை சென்ற பிறகு அவருடைய ஆட்டிட்யூட் சுத்தமாக மாறிவிட்டதாம். ஆக மொத்தம் படமே ஓடலன்னாலும் அலட்டல் மட்டும் குறையல என பிஸ்மி நாசுக்காக விமர்சித்துள்ளார்.

ஓவர் திமிராக நடந்து கொள்ளும் சூர்யா

Next Story

- Advertisement -