இமேஜை காப்பாற்ற அஜித் விளையாடிய பூங்காவை இழுத்து மூடிய பிரபலம்.. தெரியாதுன்னு சொன்னதற்கு இப்படி ஒரு காரணமா?

Actor Ajith: அஜித்தை பொறுத்தவரையில் மற்ற நடிகர்கள் போல் இல்லாமல் வித்யாசமாக எல்லாவற்றையும் செய்யக் கூடியவர். ரசிகர்களை பொறுத்தவரையில் தன்னுடைய படத்தை பார்த்தால் மட்டும் போதும் என்பதுதான் அவருடைய நிலைப்பாடு. இது தவிர தனக்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றுதான் கூறி வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இணையத்தில் அஜித் ரசிகர்கள் பொங்கி எழுந்து வருகிறார்கள். இதற்கு காரணம் அமைச்சர் துரைமுருகன் ஒரு பேட்டியில் அஜித் என்றால் யார் என்று தெரியாது என சொன்னது தான். இதனால் திமுக மற்றும் துரைமுருகனை கிண்டல் அடித்து அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Also Read : அஜித் வரிசையில் மாட்டிக்கொண்ட ரஜினி.. வெற்றி கொடுத்தும் பிரயோஜனம் இல்லாத நிலை

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பே அஜித் மற்றும் துரைமுருகன் இடையே ஒரு மோதல் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதாவது அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான இடத்திற்கு பக்கத்தில் ஒரு பார்க் அமைக்கப்பட்டு இருந்ததாம். அங்குதான் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் டென்னிஸ் விளையாட வருவார்களாம்.

அப்போது இவர்களை பார்ப்பதற்காக அங்கு கூட்டம் கூடி விடும்மாம். இதை பார்த்து தனக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று அந்தப் பார்க்கை துரைமுருகன் மூடிவிட்டாராம். இதனால் அஜித் ஏமாற்றம் அடைந்து வேறு இடத்திற்கு சென்று விட்டாராம். இதை மனதில் வைத்துக்கொண்டு தான் துரைமுருகன் தற்போது இவ்வாறு செய்திருக்கிறார் என பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த விஜய்யின் டாப் 6 பாடல்கள்.. ரஜினி, அஜித்தை பிரம்மிக்க வைத்த தளபதி

ஆனால் துரைமுருகன் எல்லாவற்றையுமே நகைச்சுவையாக பேசக்கூடியவர். சட்டசபையில் சிரிப்பலை வருவதற்கு முக்கிய காரணம் இவருடைய பேச்சாகத்தான் இருக்கும். கலைஞர் கருணாநிதி இடம் கூட இவர் உரிமை எடுத்துக் கொண்டு சில விஷயங்களை நகைச்சுவையுடன் பேசுவார்.

அதோடு மட்டுமல்லாமல் முழுக்க முழுக்க அரசியலில் மூழ்கி இருப்பதால் சினிமாவைப் பற்றி இவருக்கு தெரிவது கடினம் தான். மேலும் வயது முதிர்வினால் கூட மறதி ஏற்பட்டு துரைமுருகன் இவ்வாறு சொல்லி இருக்கலாம். ஆனால் ஒரு நடிகரைப் பற்றி இப்படி சொன்னால் இவ்வளவு பெரிய பிரளயமே வெடிக்கும் என்பதை இதன் மூலம் தெரிந்து இருக்கிறது.

Also Read : உங்க சவகாசமே வேண்டாம்னு அஜித் எடுத்த முடிவு.. மொத்த சினிமா இண்டஸ்ட்ரியும் செய்த துரோகம்

Next Story

- Advertisement -