வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜய் பதில் சொல்லாமல் லியோ படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் .. டிஜிபி வரை சென்ற புகார்

Leo Movie – Thalapathy Vijay: ஒரு மனுஷன் கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடியா இருந்தா என்னதான் பண்றது என வடிவேலு ஒரு காமெடியில் கேட்பது போல் தான் இப்போது தளபதி விஜய் நிலைமை இருக்கிறது. லியோ படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு அடுத்தடுத்து சிக்கலுக்கு மேல் சிக்கல் வந்து கொண்டே இருக்கிறது. இப்போது படத்தின் ரிலீஸுக்கு ஆப்பு வைக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

லியோ படத்தில் பிரம்மாண்டமாக ஒரு பாடல் காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 1300 நடன கலைஞர்கள் ஆடி இருப்பதாக கூட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கும் தியேட்டர் ஸ்கிரீனில் இந்தப் பாடல் காட்சியை பார்த்துவிட வேண்டுமென்ற அதிக எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது. இந்த பாடல் காட்சிகளால் தான் தற்போது ரிலீசுக்கு பிரச்சனையும் ஏற்பட்டு இருக்கிறது.

Also Read:லியோவால் பல லட்சம் நஷ்டம்.. வாயை திறக்காமல் கம்முனு உம்முனு இருக்கும் தளபதி

லியோ இசை வெளியீட்டு விழாவிற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இறுதியில் அந்த விழா ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்த தயாரிப்பாளர்கள் தரப்பு, அந்த பிரம்மாண்ட பாடல் காட்சியில் நடித்த நடன கலைஞர்களுக்கு இதுவரை சம்பளம் கொடுக்கவில்லையாம்.

அந்த நடன கலைஞர்களும் தயாரிப்பாளர் தரப்பு நபர்களிடம் சம்பளம் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இப்போ தருகிறேன், அப்போ தருகிறேன் என சாக்குபோக்கு சொல்லி அவர்களை ஏமாற்றிக் கொண்டே வந்திருக்கிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் அந்த நடன கலைஞர்கள் ரொம்பவும் டென்ஷன் ஆகிவிட்டார்கள்.

Also Read:ஜெய்ப்பதற்கு ரஜினி பயன்படுத்தும் ஃபார்முலா.. அப்படியே கெட்டியாக பிடித்துக்கொண்ட விஜய்

தற்போது படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நடன கலைஞர்கள் டிஜிபி வரை சென்று தங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என புகார் செய்திருக்கிறார்கள். அத்தோடு நடிகர் விஜய் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் எங்களுக்கு சம்பளம் கொடுக்காமல் படத்தை ரிலீஸ் செய்தால் போராட்டம் செய்வோம் என்றும் எச்சரித்து இருக்கிறார்கள்.

விஜய் மட்டுமில்லை இதுபோன்று படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் வந்தோமா, நடித்தோமா, சம்பளத்தை வாங்கினோமா என்று இல்லாமல் அந்த படம் சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த குழுவும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறார்களா, இதுபோன்று சம்பள பாக்கி ஏதேனும் இருக்கிறதா என்று கூட தெரிந்து கொண்டு அந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க முயற்சி செய்யலாம்.

- Advertisement -

Trending News