இந்தியன் 2 உடன் மோத இருக்கும் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்.. ஒத்த ஆளா விளையாட நினைத்த கமலுக்கு வந்த சோதனை

Indian 2: உலகநாயகன் கமலஹாசன் தற்போது அடுத்தடுத்து இந்தியன் 2, கல்கி போன்ற படங்களில் நடித்து வருகிறார். சங்கர் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகிய மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியை கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பட குழு தற்போது தான் மொத்த வேலைகளையும் முடித்திருக்கிறது.

படத்தின் தொழில்நுட்ப வேலைகளுக்காக தற்போது பட குழு அமெரிக்காவில் தஞ்சமாகி இருக்கிறது. கமலஹாசன் இந்த படத்திற்காக கடும் உழைப்பை போட்டு வருகிறார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இந்தியன் 2 படத்தின் வேலைகள் ரொம்பவும் தடுமாற்றத்துடனே நடந்து கொண்டு இருந்தது. இந்த பட ரிலீஸ் என்பது கமலின் மிகப்பெரிய கனவு என்று கூட சொல்லலாம்.

Also Read:கமல் மெனக்கெட்டு போன் பண்ணி கூப்பிட்டும் வர மறுத்த நடிகர்.. பிக் பாஸ் உங்களுக்கு காசு எனக்கு தூசு!

ஏற்கனவே இந்தியன் 2 பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை அப்படியே அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு மாற்றினார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் சூர்யாவின் கங்குவா மற்றும் தனுஷ் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் போன்ற படங்கள் பொங்கல் சமயத்தில் ரிலீஸ் ஆக இருப்பதால்தான்.

இப்படி எந்த போட்டியும் இல்லாமல் இந்தியன் 2 படத்தை இறக்கி வெற்றி காண வேண்டும் என்பதுதான் கமலின் பிளானாக இருந்தது. தற்போது இந்த பிளானை ஒட்டுமொத்தமாக சொதப்பும் விதமாக ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் அதே ஏப்ரல் மாதத்தை குறிவைத்து களமிறக்க பட குழுவால் திட்டமிடப்பட்டிருக்கிறது.

Also Read:பிக் பாஸ் சீசன் 7ல் கமல் வாங்கும் சம்பளம்.. காற்றுள்ள போதே கல்லாவை நிரப்பும் உலக நாயகன்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் போன்றவர்களின் சிறந்த நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் தான் புஷ்பா. பான் இந்தியா மூவியாக ரிலீஸ் ஆன இந்த படம் தெலுங்கு சினிமா மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இந்திய சினிமாவிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கான 40 சதவீத வேலைகள் முடிந்து விட்டதாம். எனவே படம் வரும் ஏப்ரல் மாதம் 2024 ஆம் ஆண்டு ரிலீசை எதிர் நோக்கி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படம் அப்படி ஏப்ரலில் ரிலீஸ் ஆனால் கண்டிப்பாக கமலுக்கு போட்டியாக அமைந்து விடும். இதை முன்னரே அறிந்து எந்த படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றப் போகிறார்கள் என இனிவரும் நாட்களில் தான் தெரியும்.

Also Read:குடும்பப் பிரச்சினையை வைத்து குளிர் காய நினைக்கும் விஜய் டிவி.. பிக் பாஸை நாரடிக்கப் போகும் 3 சர்ச்சையான ஜோடிகள்

- Advertisement -