காதலுக்கு கண்ணில்லை என்பதை நிருபித்த 5 நட்சத்திர தம்பதியினர்.. அழகை பார்க்காமல் கரம் பிடித்த அட்லி-பிரியா

சினிமா பிரபலங்கள் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவர்கள், தன்னைவிட அழகு குறைவாக இருக்கும் நபர்களை திருமணம் செய்து கொண்டு காதலுக்கு கண்ணில்லை என்பதை நிரூபித்துள்ளனர். அதிலும் கொக்கோ கோலா போல இருக்கும் அட்லிக்கு மிராண்டா போன்ற போல் இருக்கும் பொண்டாட்டி கிடைத்தது தான் ஆச்சரியம்.

தனுஷ்-ஐஸ்வர்யா: கோலிவுட் மட்டுமல்ல பாலிவுட், ஹாலிவுட் என கொடி கட்டி பறக்கும் தனுஷ் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இதில் தனுஷை விட ஐஸ்வர்யாவிற்கு வயது அதிகம் என்றாலும் இவர்கள் இருவரும் காதலித்ததால் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

அதன் பிறகு இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் பிறந்தது. அதன்பின் சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் ரஜினி உள்ளிட்டோரின் அறிவுரைகள் மீண்டும் மகன்களுக்காக சேர்ந்து வாழும் முடிவில் உள்ளனர்.

Also Read : மாமனார் வில்லனை தட்டி தூக்கிய தனுஷ்.. கேப்டன் மில்லரில் நடக்கப் போகும் சம்பவம்

அட்லி-பிரியா: தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் இளம் இயக்குனர் அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 8 வருடங்களாக சந்தோசமான நட்சத்திர தம்பதியர்கள் ஆக வாழ்ந்து வரும் இவர்களைப் பார்த்து பலரும் பொறாமை படுகின்றனர். அதிலும் அட்லிக்கு இப்படி ஒரு மனைவியா என்றும் பலரும் வயிற்று எரிச்சலில் உள்ளனர்.

தேவயானி-ராஜகுமாரன்: குடும்ப குத்து விளக்காக தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த தேவயானி அழகைப் பொருட்படுத்தாமல் சுமாராக இருக்கும் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய காதலுக்கு முதலில் தேவயானியின் தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை.

Also Read : ரஜினி மகள்களால் நகுல் எடுத்த முடிவு.. இன்று வரை ஒதுங்கி இருக்கும் தேவயானி

பிறகு தேவயானியின் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்த போதிலும் நண்பர்கள் முன்னிலையில் 2001 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அன்று முதல் இன்று வரை ரொம்பவும் சந்தோஷமாக வாழும் இந்த நட்சத்திர தம்பதியருக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

குஷ்பூ-சுந்தர் சி: 80களில் இளசுகளின் கனவு கன்னியாக இருந்த குஷ்பூ, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல வெவ்வேறு மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்த பெருமைக்குரியவர். அதன்பின் இவர் 2000 ஆம் ஆண்டில் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிறகு இவர் தன் கணவர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படங்களையும் தயாரிப்பதில் கவனம் செலுத்தினார். இப்படி சினிமாவில் தான், மட்டுமல்ல தன்னுடைய காதல் கணவரையும் குஷ்பூ தூக்கி நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ரோஜா-ஆர்.கே. செல்வமணி: 1992 ஆம் ஆண்டு செம்பருத்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ரோஜா, அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் அழகை பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு ரோஜாவுக்கு அரசியலிலும் ஆர்வம் ஏற்பட்டு தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராகவும் தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சராகவும் திகழ்கிறார்.

இவ்வாறு இந்த 5 சினிமா நட்சத்திரங்கள் பிரபலங்களும் காதலுக்கு கண் இல்லை என்பதை காட்டும் விதத்தில் தங்களுடைய வாழ்க்கை துணையைத் தேடி உள்ளனர். அதிலும் அட்லிக்கு கிடைத்த ஜோடி தான் ஹைலைட்.

Also Read : ஹீரோயினாக மளமளவென வளர்ந்து நிற்கும் வாரிசு நடிகை.. நாசுக்காக ஸ்கெட்ச் போடும் ரோஜா

- Advertisement -spot_img

Trending News