From Sun TV to ZEE Network, it is a shame to ask for GOAT movie at a low price: சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அவர்கள் தனது அதிரடியான நடவடிக்கையினால், தமிழகத்திலும் சரி, திரையிலும் சரி பலரை வாயடைக்க வைத்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் என்று தனது கட்சியை ஆரம்பித்து அனுபவம் மிகுந்த அரசியல் கட்சிக்கு இணையாக பல்வேறு அணிகளை தனது கட்சிக்குள் ஏற்படுத்தினார்.
மேலும் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி அதிக உறுப்பினர்களை இணைத்து சாதனை படைத்திருந்தார். அரசியலில் அசுரவேகம் எடுக்கும் தளபதி தற்போது வெங்கட் பிரபுவுடன் உடன் கோட் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ரஷ்யாவில் இருந்து சென்னை வந்து சென்றார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் விஜய் உடன் மீனாட்சி சௌத்ரி, லைலா, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா அஜ்மல், மோகன், ஜெயராம் என பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்
சமீபத்தில் விஜய்யின் குரலில் உருவாகி வெளியான விசில் போடு பாடல் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது
இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, செப்டம்பர் 5, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோட் படத்தை ரிலீஸ் செய்வது என முடிவு செய்துள்ளனர் படக் குழுவினர்கள்.
கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை குறைந்த விலைக்கு கேட்ட விஜய் டிவி
இதற்கு முன் பிகில் படத்தின் சாட்டிலைட் உரிமையை, சன் நெட்வொர்க் நிறுவனம் 25 கோடி கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
எப்போதுமே சன் நெட்வொர்க் தான், விஜய் படத்தின் தொலைக்காட்சி உரிமையை அதிக விலை கொடுத்து வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
கோட் படத்தின் தொலைக்காட்சி உரிமை பற்றிய விற்பனை ஆரம்பித்தபோது சன் டிவி தான் முதலில் கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்குவதாக இருந்தது.
பின் திடீரென்று வேண்டாம் என்று பேக் அடித்தது. இதற்குப் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஜி நெட்வொர்க்கிடம் கேட்டதற்கு இப்போதைக்கு எங்ககிட்ட ஃபண்ட் இல்ல, இவ்வளவு தான் முடியும் என மிகக் குறைந்த விலைக்கு கேட்டது.
கடைசியா விஜய் டிவியிடம் டீல் பேசிய போது, விஜய் டிவி வெறும் 12 கோடிக்கு கோட் படத்தை கேட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனம் தொலைக்காட்சி நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.