Kannagi Movie Review- 4 பெண்களின் வலி நிறைந்த போராட்டம்.. கண்ணகி தாக்கமா, விவாதமா.? முழு விமர்சனம்

Kannagi Movie Review: அண்மை காலமாகவே பெண்களை மையப்படுத்தி வெளிவரும் படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அப்படி ஒரு கதைக்களத்துடன் இன்று வெளியாகி இருக்கும் படம் தான் கண்ணகி. நான்கு பெண்களின் வலி நிறைந்த வாழ்க்கையை சொல்லி இருக்கும் இப்படத்தின் விரிவான விமர்சனத்தை இங்கு காண்போம்.

அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா, ஷாலின் ஜோயா, மயில்சாமி, மௌனிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ட்ரைலரிலேயே ஒரு ஆர்வத்தை தூண்டி இருந்த இப்படம் தற்போது நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. நான்கு வெவ்வேறு காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் ஒரு மையப்புள்ளியில் சந்திக்கும் கதை தான் இப்படம்.

திருமணத்திற்காக காத்திருக்கும் அம்மு அபிராமி. திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் லிவிங் வாழ்க்கையில் ஜாலி பண்ணும் ஷாலின் ஜோயா. காதலனால் கர்ப்பமாகும் கீர்த்தி பாண்டியன் அந்தக் கருவை கலைக்க முயற்சிப்பது. விவாகரத்து கேட்கும் கணவருடன் இணைந்து வாழ விரும்பும் வித்யா. இந்த நான்கு பெண்களின் கதையும் ஒரு இடத்தில் வந்து நிற்கிறது.

Also read: இருண்டு போன 4 பெண்களின் புரட்சி போராட்டம்.. வன்மத்தை எரிக்கப் போகும் கண்ணகி ட்ரெய்லர்

இதில் சம்பந்தப்பட்ட பெண்கள் எந்த அளவுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை ஒரு ஆணாக விளக்கி இருக்கும் இயக்குனரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு ஆணின் பார்வையில் பெண்ணின் வலிகளை இந்த அளவுக்கு கடத்த முடியுமா என்ற ஆச்சரியத்தையும் நமக்கு கொடுக்கிறது.

அடுத்தபடியாக பெண்கள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அதிலும் அம்மு அபிராமி ஒவ்வொரு முறையும் வரன் தட்டி போவதால் ஏற்படும் வலியையும், மன உளைச்சலையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதேபோன்று கீர்த்தி பாண்டியன் கர்ப்பிணியாக உணர்வுகளின் மூலமாகவே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அதிலும் வயிற்றில் அடித்துக் கொண்டு கதறும் அந்த காட்சி பதைபதைக்க வைக்கிறது. அதேபோன்று பீரியட்ஸ் பத்திய மூட நம்பிக்கைக்கும் இயக்குனர் சரியான பதிலடியை கொடுத்திருக்கிறார். ஆனால் படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம் என்பதால் சிறு சோர்வு ஏற்படுகிறது. அதேபோன்று பாடல்களும் பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

Also read: சாமி வேற சயின்ஸ் வேற.. கண்ணகியால் வெடிக்கும் சர்ச்சை, மூடநம்பிக்கைக்கு பதிலடி

இருப்பினும் அழுத்தமான கதையோடு வெளியாகி உள்ள இப்படம் குறைந்தபட்சம் பார்வையாளர்களுக்கு நான்கு நாள் தாக்கத்தையாவது கொடுக்கும். அதே சமயம் சில விவாதங்களுக்கும் வழிவகுக்கும். அந்த அளவுக்கு வசனங்கள் தெறிக்கிறது. அந்த வகையில் நான்கு பெண்களின் வலியில் உருவான இந்த கண்ணகி விவாதத்துடன் கூடிய தாக்கமாக இருக்கிறது.

சினிமா பேட்டை ரேட்டிங்: 2.75/5

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்