ஜெயிலர் வசூலை முந்தும் லியோ.. விட்ட சவாலில் பின்வாங்கும் விஜயகாந்தின் விசுவாசி

Jailer-Leo: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்று 650 கோடியை தாண்டி வசூல் செய்தது. ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படமாக ஜெயிலர் மாறி இருக்கிறது. லியோ படம் வெளியாவதற்கு முன்பு ஜெயிலர் வசூலை இப்படம் முறியடிக்கும் என்றும் கிட்டதட்ட 1000 கோடி கிளப்பில் இணையும் என சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர்.

அதற்கேற்றார் போல் லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கிட்டத்தட்ட ஐந்து நாட்களிலேயே 400 கோடியை தாண்டி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் கூடிய விரைவில் ஜெயிலர் வசூலை லியோ முறியடித்து விடும் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக மீசை ராஜேந்திரன் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.

அப்போது ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்க வாய்ப்பே இல்லை என கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் அப்படி லியோ அதிக வசூல் பெற்றால் என்னுடைய மீசையை எடுத்து விடுவேன் என்று சவால் விட்டார். லியோ ரிலீஸுக்கு பிறகு சமீபத்திய ஊடகம் ஒன்றிற்கு மீசை ராஜேந்திரன் பேட்டி கொடுக்கும் போது இந்த சவால் குறித்து கேட்கப்பட்டது.

இப்போது லியோ வசூல் குறித்து வரும் தகவல் எல்லாமே பொய்யானது தான். படம் குறித்து நிறைய நெகட்டிவ் விஷயங்களை கூறிவருகிறார்கள். வேண்டுமென்றே 300 கோடி, 400 கோடி என்று பொய்யான தகவலை பரப்பி வருவதாக குற்றம் சுமத்தி இருக்கிறார். போட்ட சவாலில் இருந்து பின் வாங்கி இவ்வாறு சப்பக்கட்டு கட்டுவதாக மீசை ராஜேந்திரனை விஜய் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

மேலும் ரஜினியை வம்பிழுப்பதற்காக தான் இரண்டாம் பாதியில் கழுகு காட்சி வைக்கப்பட்டதாக மீசை ராஜேந்திரன் கூறியிருக்கிறார். லியோ படத்தின் சில காட்சிகள் ரஜினி படத்திலிருந்து காப்பி அடித்துள்ளனர். எப்போதுமே ரஜினிக்கு இணையாக விஜய் வர முடியாது.

மேலும் லலித் விஜய்யின் மார்க்கெட்டை உயர்த்துவதற்காக எவ்வளவு கோடி வசூல் அதிகமாக சொன்னாலும் நம்ப மாட்டார்கள் என்றும் விலாசி இருக்கிறார். ஆனால் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நடப்பதற்கு முன்பாகவே விஜய் படத்தின் படப்பிடிப்பை எடுத்து முடித்து விட்டனர். ஆனால் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக மீசை ராஜேந்திரன் இவ்வாறு உளறி வருகிறார் என பலரும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்