வந்த சுவடு தெரியாமலேயே மறைந்து போன குணசேகரன்.. புது அஸ்திவாரத்தை கையில் எடுத்த எதிர்நீச்சல்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் யார் கண்ணு பட்டுதோ தெரியல தற்போது தட்டு தடுமாறி வருகிறது. அதுவும் குணசேகரன் என்கிற கதாபாத்திரம் இல்லாததால் சேர்த்து வைத்த மொத்த பெயரும் டேமேஜ் ஆகி விட்டது. அதற்கு காரணம் புதிதாக வந்த குணசேகரனின் நடிப்பு கொஞ்சம் கூட செட் ஆகவில்லை. தயவு செய்து இவர் வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு மிகக் கொடுமையாக இருந்தது.

அதனால் ஒரே நாளில் வந்த சுவடு தெரியாமல் புது குணசேகரன் மறைந்து போய்விட்டார். ஏனென்றால் தொடர்ந்து இவரை நடிக்க வைத்தால் ஒரேடியாக நாடகத்தை க்ளோஸ் பண்ண வேண்டியதாகிவிடும் என்பதால் எதிர்நீச்சல் மற்றும் சன் டிவி அதிரடியான முடிவை எடுத்து அவருடைய கதையை க்ளோஸ் பண்ணி விட்டது.

அதே மாதிரி தற்போது கதிர், ஞானம், குணசேகரனின் அம்மா, ஜான்சி ராணி மற்றும் கரிகாலன் இவர்களுடைய நடிப்பு வர வர பிடிக்காமல் போய்க்கொண்டிருக்கிறது. அதாவது ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். அதே போல் இந்த மொத்த நாடகத்திற்கு ஆணிவேராக இருந்து நடிப்பை கொடுத்தவர் குணசேகரன்.

அப்படிப்பட்ட இவர் இல்லாததால் நாடகம் எப்படி இருந்தாலும் சரி எங்களுக்கு பார்க்க விருப்பம் வரவில்லை. அத்துடன் இதற்கு முன்னாடி பிடித்தவர்கள் எல்லாம் தற்போது பிடிக்காமல் போய்விட்டது. அவர்கள் பேசுற பேச்சும் சரியில்லை. மொத்தத்தில் நாடகமே எங்களுக்கு பார்க்க விருப்பமில்லை என்று பலரும் ஆதங்கத்துடன் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதனால் எப்படி இந்த நாடகத்தை பழையபடி கொண்டு வர வேண்டும் என்று தெரியாமல் இயக்குனர் படாத பாடு பட்டு தவித்து வருகிறார். இருந்தாலும் கடைசி அஸ்திவாரமாக ஒரு முயற்சியை தற்போது எடுத்திருக்கிறார். அதாவது ஊரில் திருவிழா நிகழ்ச்சியை ஆரம்பித்து அதை எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வந்து அடிமையாக இருக்கும் மருமகளுக்கு விடிவுகாலம் பிறக்கிற மாதிரி காட்சிகள் வரப்போகிறது.

அத்துடன் அப்பத்தாவும் அந்த 40% சொத்துக்கு ஒரேடியாக முடிவு கட்டப் போகிறார். இதில் ஜீவானந்தம் தலைமை தாங்க வரப்போகிறார். இந்த விஷயம் தெரிந்ததும் கதிர் அந்த இடத்தில் ஜீவானந்தத்தின் கதையை முடித்து விடலாம் என்று சைக்கோ வளவன் மூலமாக காரியத்தை நகர்த்தப் போகிறார். அந்த வகையில் இந்த நாடகம் மறுபடியும் சூடு பிடிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.