பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பகாசூரன். ஏற்கனவே மோகன் ஜி-யின் முந்தைய படங்களில் வெளிப்பட்ட சாதி சார்ந்த கருத்துக்களால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பகாசூரன் படமும் மோகன் ஜி-க்கு பெரிய தலைவலியை தந்தது.
ஏனென்றால் அவர் செல்லும் இடமெல்லாம், பேட்டிகளில் வெறியேற்றும் வகையில் செய்தியாளர்கள் கேள்வி கேட்கின்றனர். மோகன் ஜி பிற்போக்குத்தனமாக யோசித்து படம் எடுக்கிறார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமல்ல படத்தில் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட நகரங்களில் வாழ்பவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் போல் வாழ்கின்றனர் என்று மோகன் ஜி சொன்னது பெரும் சர்ச்சையை கிளப்புகிறது.
Also Read: செல்வராகவனை வைத்து சூரசம்காரம் செய்த பகாசூரன் பட விமர்சனம்.. அழுத்தமான விஷயத்தை சொல்லிய மோகன் ஜி
அத்துடன் பெண் பிள்ளைகளை படிக்க வெளியூருக்கு அனுப்பக்கூடாது. அவர்களிடம் செல்போன் கொடுக்கக் கூடாது போன்ற விஷயங்களை மோகன் ஜி பெற்றோர்களுக்கு வலியுறுத்தும் வகையில் படம் இருப்பதாகவும் எதிர்ப்புகள் கிளம்புகிறது. ஆனால் இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதத்தில் சமீபத்தில் மோகன் ஜி பேட்டி அளித்திருக்கிறார்.
அதிலும் எதனால் பெண்கள் செல்போனை ஜாக்கிரதாயாக பயன்படுத்த வலியுறுத்தினேன் என்பதற்கான வீடியோ ஆதாரத்தையும் அந்த பேட்டியில் காண்பித்து மிரட்டி விட்டார். கொரோனா காலகட்டத்தில் பெண்களின் வறுமை நிலையை பயன்படுத்தி அவர்களை ஆன்லைன் மூலம் பலான தொழிலுக்கு சிலர் கொண்டு சென்றனர். இதற்கு அவர்கள் செல்போனில் இருக்கும் ஆப்-களை பயன்படுத்தி காரியம் சாதிக்கின்றனர். அத்துடன் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் குடும்பத்தில் எந்தவிதமான விளைவுகளை உருவாக்கும் என்ற ஆழமான கருத்தை வலியுறுத்தினார்.
மேலும் ஒரு மொபைல் போனில் எந்த அளவிற்கு நன்மை இருக்கிறதோ அதே அளவிற்கு அதில் தீமையும் இருக்கிறது என, இளம் சமுதாயத்திற்கு விழிப்புணர்வை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பகாசூரன் படத்தை எடுத்ததாக சொன்னார். மேலும் செல்போனில் ஒரு சில ஆப் டவுன்லோட் செய்தால் அதில் எவ்வளவு மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் காட்டப்படுகிறது என்று, தன்னுடைய கையில் இருக்கும் தொலைபேசியின் மூலம் ஆதாரத்துடன் காட்டினார்.
இதற்காக அவர் பேட்டியின் போது, ‘இரண்டு நிமிடம் கட் செய்யுங்கள்! கண்கூடாகவே அந்த ஆப்-பில் என்ன நடக்கிறது என்பதை காண்பிக்கிறேன்’ என்று சொன்னார். மேலும் அவர் காட்டிய ஆப்-களில், பெண்களை சுலபமாகவே பலான தொழிலுக்கு இழுத்து விடுவதற்கான அத்துணை வசதிகளையும் செய்து வைத்திருக்கின்றனர். இந்த வீடியோ ஆதாரம் இடம்பெற்ற மோகன் ஜி-யின் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.