இந்தாண்டு வசூலில் சாதனை செய்த டாப் 5 படங்கள்.. இங்கேயும் கெத்து காட்டும் தளபதி

கோலிவுட்டில் வசூல் மன்னன் எப்பவும் நான் தான் என்பதை தளபதி விஜய் நிரூபித்துள்ளார். ஆமாங்க 2021ஆம் ஆண்டு அதாவது இந்தாண்டு வெளியாகி அதிக வசூல் பெற்ற டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தளபதி விஜய் தான் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை படங்களின் வரிசைப்படி பார்க்கலாம்.

டாப் 5 படங்கள் பட்டியலில் விஜய் நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படம் முதல் இடம் பிடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம் சுமார் 250 கோடி ரூபாய் வசூல் செய்து முதல் இடத்தை பிடித்ததோடு எப்பவும் தளபதி தான் வசூல் கிங் என நிரூபித்துள்ளது.

இரண்டாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான அண்ணாத்த படம் உள்ளது. இயக்குனர் சிவா உடன் ரஜினி முதல் முறையாக கூட்டணி அமைத்த அண்ணாத்த படத்தில் ரஜினி தவிர நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் சுமார் 150 கோடி வசூல் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதனை தொடர்ந்து சிம்பு நடிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான மாநாடு படம் மூன்றாவது இடத்தில் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் டைம் லூப் பாணியில் உருவாகியிருந்த மாநாடு படம் சிம்புவிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. மேலும் 101.55 கோடி ரூபாய் வசூல் செய்து டாப் 5 படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இப்படங்களை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் 100 கோடி வசூல் செய்து நான்காவது இடத்திலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் 70 கோடி வசூல் செய்து ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

ரஜினியை பின்னுக்கு தள்ளி வசூல் சாதனையில் விஜய் முதல் இடம் பிடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படமும் இதைவிட அதிக வசூலை செய்து புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்