ஆபாவாணன் குறும்படத்தால் கிடைத்த பிரம்மாண்ட வெற்றி.. இன்றுவரை எதிர்பார்ப்பில் விஜயகாந்தின் 2-ம் பாகம்

தமிழ் சினிமாவில் ஒரு புது ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படம் தான் ஆபாவாணன் இயக்கிய ஊமை விழிகள். 1986 ஆம் ஆண்டு பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் இந்த படம் வெளிவந்தது.

சோழா பிக்னிக் வில்லேஜ் என்ற இடத்திற்கு வரும் பெண்கள் மர்மமான முறையில் காணாமல் போகிறார்கள். அங்கு நடக்கும் மர்மங்களை பத்திரிக்கையாளர் ஒருவர் போலீசாரின் உதவியுடன் கண்டுபிடிக்கிறார். இதுவே இந்த படத்தின் திரைக்கதை.

திரைப்பட கல்லூரி மாணவரான ஆபாவாணன் இயக்கிய முதல் திரைப்படம் இது. ஆபாவாணன் தன் கல்லூரியில் இயக்கிய த்ரில்லர் குறும்படமான மர்டர் எக்கோ படத்தை மையமாக வைத்து ஊமைவிழிகள் திரைப்படத்தை இயக்கினார்.

திரைப்பட கல்லூரியில் படித்த மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த படத்தை முடித்துள்ளனர். முன்னணி நடிகர்களுடன் கல்லூரி மாணவர்களும் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதிலும் தோல்வி நிலை என நினைத்தால் என்ற பாடல் ஈழத்தமிழர் பிரச்சனையை மையமாக வைத்து ஆபாவாணன் எழுதிய பாடல் ஆகும்.

திரைப்பட கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தென்னிந்திய சினிமாவையே பிரம்மிக்க வைத்தது. படம் வெளியாகி 33 ஆண்டுகள் கடந்த பின்னும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படம் ஊமைவிழிகள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்