வலிமைக்கு வந்த விடிவுகாலம்.. அட்டகாசமான அப்டேட் இதோ!

தல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் இரண்டாவது படமாக உருவாகி வருகிறது வலிமை. ஆனால் அவர்கள் நினைத்ததை விட அதிக நாட்கள் படமாக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இழுத்துக் கொண்டிருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக வெளிநாடு செல்ல வேண்டிய சிக்கலில் சிக்கிய மாட்டித்தவித்த வலிமை படத்தை இந்தியாவிலேயே செட்டு போட்டு கிட்டத்தட்ட படத்தை முடித்து விட்டனர். இன்னும் பேட்ச் வொர்க் மட்டும்தான் பாக்கி.

அதாவது ஆங்காங்கே சில காட்சிகளை ஒட்டுவதற்காக கிட்டத்தட்ட நான்கு நாட்கள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடைசி கட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளாராம் வினோத். சில நாட்கள் மட்டுமே நடக்கும் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இன்னும் 2 வாரத்திற்குள் வலிமை படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என கூறியுள்ளனர் அஜித் வட்டாரங்கள். அதனைத் தொடர்ந்து கொஞ்சமும் தாமதிக்காமல் அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் மூன்றாவதாக ஒரு படம் உருவாக உள்ளது.

இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். அதனைத் தொடர்ந்து வருகின்ற ஜூலை 15ஆம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதியான தகவலாக தெரிகிறது.

வலிமை படம் வருகின்ற தீபாவளியை குறி வைத்து உருவாகி இருப்பதாகவும் கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து அடுத்ததாக உருவாகும் படம் 2022 சம்மர் வெளியீடு எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

valimai-cinemapettai
valimai-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்