ட்விட்டர் நிறுவனத்தை மிரள விட்ட தனுஷ் ரசிகர்கள்.. அடேங்கப்பா ஒரே நேரத்துல இத்தன ஆயிரம் பேரா.?

கொரோனா காலகட்டத்தில் ரசிகர்களுடன் உரையாடுவதற்கு இன்ஸ்டா லைவ் மிகவும் பிரபலமானது. அதற்கு போட்டியாக தற்போது ட்விட்டர் ஸ்பேஸ் என்ற பொழுதுபோக்கான லைவ் சேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

இதில் தனுசுடன் நெருங்கிவர்களும், ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர். ஒரே நேரத்தில் அதிகமாக உரையாடிய Army of the Dead என்ற space சாதனையை தனுஷ் ரசிகர்கள் முறியடித்துள்ளனர். கிட்டத்தட்ட 17 ஆயிரம் ரசிகர்கள் ஒரே நேரத்தில் இணைந்து தனுஷுடன் கேள்வி கேட்டு உரையாடி உள்ளனர்.

இந்த உரையாடலில் ஜகமே தந்திரம் பற்றி, அடுத்த 3 வருடங்களுக்கு தனுஷ் என்ன பிளான் வைத்துள்ளார், இயக்குனர் ஆவதற்கு என்ன முயற்சி எடுத்து வருகிறார் என்பது போன்ற பலவிதமான கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது.

இது போன்று இணையதளத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக பிரபலங்கள் நேரத்தை ஒதுக்கி குஷி படுத்தி வருகின்றனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ போன்ற பிரபலங்கள் நடிப்பில் ஜகமே தந்திரம் ஜூன் 18ஆம் தேதி Netflix தளத்தில் வெளி வர உள்ளது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ணன் படத்தின் வெற்றிக்கு பின் வெளிவருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

dhanush-twitter-space-record
dhanush-twitter-space-record
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்