மேடைக்கு மேடை நயன்தாராவை நாறடிக்கும் அரசியல் பிரமுகர்கள்.. எல்லாத்துக்கும் உதயநிதி தான் காரணமாம்!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராவை தற்போது ஓட்டுக்காக மேடைக்கு மேடை அரசியல் பிரமுகர்கள் அசிங்கமாக பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் இடையில் உறவு இருந்ததாக தற்போது வரை பேசி வருகின்றனர். இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இருவரும் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்ததால் இந்த விவகாரம் தலைதூக்கியது.

அதன்பிறகு உதயநிதியும் நயன்தாராவும் ஒரு சின்ன அண்டர்ஸ்டாண்டிங்கில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். புரிஞ்சவங்க புரிஞ்சுக்குங்க, புரியாதவங்க புரிஞ்சவங்கள கேட்டு தெரிஞ்சுக்கோங்க என அப்போதே சில கிசுகிசுக்கள் எழுந்தது.

சரி தொடர்ந்து ஒரே ஜோடி சினிமாவில் நடித்தால் கிசுகிசுக்கள் வருவது சகஜம் தானே என சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து நயன்தாராவை அசிங்கமாக பேசியதாக ராதாரவி கட்சியை விட்டு நீக்கினர். அங்குதான் சனியன் சடைபோட ஆரம்பித்துள்ளது.

தற்போது அரசியல் களம் சூடு பிடித்துள்ளதால் ஓட்டுக்காக எதிர் எதிர் கட்சிகளை மாற்றி மாற்றி தாக்கி பேசுகின்றனர்.அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சியை மொத்தமாக பங்கம் செய்து வருவதால் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நயன்தாரா விஷயத்தை முதலில் கையில் எடுத்தவர் ராதாரவி.

அதன்பிறகு நயன்தாராவுக்கும் உதயநிதிக்கும் தொடர்பு இருப்பதை மேடைக்கு மேடை சொல்லி வருகின்றனர். ஓட்டுக்காக இப்படியெல்லாமா பேசுவது என்ற கருத்துகள் ஒரு பக்கம் இருந்தாலும், இருவருக்குள்ளும் உறவு இருந்தது உண்மைதானா என்ற சந்தேகமும் கோலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளது. மேலும் இதை கேள்விப்பட்டதிலிருந்து நயன்தாரா மிகவும் அப்செட்டில் இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

nayanthara-udhay-cinemapettai
nayanthara-udhay-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்