சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நான் பிச்சை எடுத்தேனா? மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் 90ஸ் சீரியல் நடிகர்?

தமிழில் எத்தனை சீரியல்கள் வந்தந்தாலும் மெட்டி ஒலி சீரியலுக்கு ஒரு தனி இடம் தான். 90ஸ் கிட்ஸ்களுக்கு இன்றும் அந்த மெட்டி ஒலியை மறக்க முடியாது . அது 811 எபிசோடுகள் வரை ஒளிபரப்பானது. இந்த சீரியலில் செல்வமாக நடித்த விஷ்வாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் இவர் தொடர்ந்து பல சீரியல்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில், திடீரென காணாமலே போய்விட்டார். ஆனால் இது தொடர்பாக அவர் கொடுத்த சமீபத்திய பேட்டியில், அவர் காணாமல் போனதை மறுக்கிறார். அவருக்கு மெட்டி ஒளி சீரியல் ஒரு நல்ல ஸ்டாண்டர்டை ஏற்படுத்தி கொடுத்தது. அதே போல ஒரு சிறந்த கதாபாத்திரம், சிறந்த கதை வேண்டும் என்று வெயிட் பண்ணாராம். ஆனால் அவருக்கு, அவர் எதிர்பார்த்தது போல எதுவும் அமையவில்லை.

தவிர அவர் பிசினெஸ்ஸை கவனிக்க ஆரம்பித்து விட்டாராம். மேலும் அவர் கூறிய சில விஷயம் தற்போது, சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது. “ஒரு சிலர் வியூஸ்-காக செய்யக்கூடிய பித்தலாட்டங்களை பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.”

ரீ என்ட்ரி கொடுக்கும் மெட்டி ஒளி நடிகர்

“நான் மூட்டை தூக்கினேன், பிச்சை எடுக்கிறேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் செத்துப்போயிட்டேன் ன்னு கூட சொல்லி இருக்காங்க. தவிர நான் வாய்ப்பு தேடி producer வீடு வீடாக சென்றேன் என்றெல்லாம் கூறினார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது தமாஷா இருக்கு. நான் எப்போதுமே எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டு எந்த தயாரிப்பாளரிடமும் சென்று நின்றது இல்லை. எனக்கு அப்படி நிக்க வேண்டிய தேவையும் வந்தது இல்லை..”

இப்படியான வேடிக்கையான ரூமர்களை பார்க்கும்போது, நானும் ஒரு ரூமர் ஸ்பிரட் பண்ண நினைக்கிறேன். “நான் மீண்டும் சீரியலில் ரீ- என்ட்ரி கொடுக்க போகிறேன்” என்று சிரித்துக்கொண்டே தமாஷாக சொல்லி இருக்கிறார். அடுத்ததாக மெட்டி ஒளி 2 சீரியல் வரவிருக்கும் நிலையில், ரசிகர்கள் இவரின் வருகையை மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

- Advertisement -

Trending News