வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

25 வருடங்களுக்கு முன்பு ஒரே நாளில் ரிலீஸ் ஆன 8 படங்கள்.. கமலுக்கு பயத்தை காட்டி ஹிட்டடித்த படம்

தீபாவளியை பொறுத்த வரைக்கும் பண்டிகை கொண்டாட்டம் என்பதை தாண்டி அன்றைய நாளில் ரிலீஸ் ஆகும் படங்களின் மேல் சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இப்போதெல்லாம் தீபாவளி என்றால் இரண்டு மூன்று படங்கள் ரிலீஸ் ஆவது என்பதே மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால் 1996 ஆம் ஆண்டு தீபாவளி ரிலீஸில் மொத்தம் எட்டு படங்கள் போட்டி போட்டு இருக்கின்றன.

அலெக்சாண்டர்: கேப்டன் விஜயகாந்த் மற்றும் சங்கீதா நடிப்பில் வெளியான படம் அலெக்ஸாண்டர். இந்த படத்தை கேயார் இயக்கியிருந்தார். இந்த படம் 100 நாட்கள் ஓடியது. ஆனால் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

Also Read: சிம்புவை வைத்து காய் நகர்த்தும் கமல்.. எதிர்பார்க்காத மெகா கூட்டணி.!

கோகுலத்தில் சீதை: காதல் கோட்டை திரைப்பட வெற்றி இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் வெளியான படம் கோகுலத்தில் சீதை. இந்த படத்தில் கார்த்திக், சுவலட்சுமி, கரண் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

கல்கி: இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கல்கி. இந்த படத்தில் ரகுமான், பிரகாஷ் ராஜ், கீதா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் பெண் உரிமையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சி: இன்று முன்னணி அரசியல்வாதியாக இருக்கும் சீமானின் இயக்கத்தில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசிய படம் பாஞ்சாலங்குறிச்சி. இந்த படத்தில் பிரபு மற்றும் மதுபாலா ஆகியோர் நடித்திருந்தனர்.

சேனாதிபதி: சத்யராஜ், சுகன்யா, சௌந்தர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சேனாதிபதி. இந்த படத்தை எம்.ரத்னகுமார் இயக்கியிருந்தார். இந்த படம் கமர்ஷியலாக சத்யராஜுக்கு வெற்றிப்படமாக அமைந்தது என்று சொல்லலாம்.

Also Read: 1.5 கோடி சம்பளம் , கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த தயாரிப்பாளர்.. நான்கு மடங்கு லாபம் பார்த்த உலக நாயகன்

நேதாஜி: சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் நேதாஜி. எம்.மூர்த்தி இயக்கிய இந்த திரைப்படத்தில் மணிவண்ணன், சரண்ராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர்.

மிஸ்டர் ரோமியோ: நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா நடித்து வெளியான திரைப்படம் மிஸ்டர் ரோமியோ. கே.எஸ்.ரவி இயக்கத்தில், சூப்பர் குட் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தில் பிரபுதேவா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

அவ்வை சண்முகி: உலக நாயகன் கமலஹாசன் படம் முழுக்க பெண் வேடமிட்டு நடித்த திரைப்படம் அவ்வை சண்முகி. இந்த படத்தில் கமல் பெண் குரலில் டப்பிங்கும் கொடுத்திருந்தார், பாடலும் பாடியிருந்தார். எட்டு படங்களுள் ஒன்றாக ரிலீஸ் ஆனாலும் அவ்வை சண்முகி மிகப்பெரிய ஹிட் அடித்தது, மற்ற படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளியது.

Also Read: 19 ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கிய உலகநாயகன்.. ஹேராம் படத்திற்கு பிறகு வாங்காத காரணம் என்ன?

- Advertisement -

Trending News