Rottweilers attack: சிறுமியை கடித்து குதறிய நாய்கள்.. தயவு செய்து இந்த 7 வகை நாய்களை வீட்ல வளக்காதீங்க

Rottweilers attack: நேற்று ஆயிரம் விளக்கு பகுதியில் பார்க்கில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்து குதறி இருக்கின்றன. படுகாயம் அடைந்த சிறுமி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

வீட்டில் கட்டப்பட்டு இருந்த நாய்கள் கயிறை அறுத்துக் கொண்டு ஓடி வந்து பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடித்து குதறி இருப்பது நாய்கள் மீதான ஒரு வித மரண பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எல்லா நேரங்களிலும் வளர்ப்பு நாய்களை குறை சொல்லி விட முடியாது. நாம் அதற்கான சரியான வழிமுறைகளை பயன்படுத்தி அவைகளை வளர்காததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எது எப்படியோ, உங்கள் வாழ்நாட்களில் குறிப்பிட்ட இந்த ஏழு வகை நாய்களை மட்டும் வீட்டில் வளர்க்க ஆசைப்படாதீர்கள். அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும். அந்த ஏழு வகை நாய்களை பற்றி பார்க்கலாம்.

இந்த 7 வகை நாய்களை வீட்ல வளக்காதீங்க

பிட்புல்: இந்த லிஸ்டில் முதலில் இருப்பது பிட்புல் வகை நாய்கள் தான். இந்த இனம் அந்த காலத்தில் காளையுடன் சண்டை போடுவதற்காக உருவாக்கப்பட்டது. அதனால் தான் இதன் தாடைகள் ரொம்பவும் பெரியதாகவும் வலிமையானதாகவும் இருக்கும். இந்த வகை நாய்கள் ஒரு முறை கடித்தாலே பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். சமீபத்தில் இந்த நாய்கள் கடித்து நிறைய பேர் இறந்து இருப்பதாக செய்திகள் கூட வெளியாகி இருப்பதை கவனித்திருப்போம்.

அமெரிக்கன் புல்டாக்: இந்த வகை நாய்கள் பழகும் வரை நன்றாக தான் இருக்கும். ஆனால் இவை சற்று பயந்தாலோ, அச்சுறுத்தப்பட்டாலோ அருகில் இருப்பவர்கள் காலி. இதன் கூர்மையான பற்கள் உயிரை பதம் பார்த்து விடும்.

கங்கல்: உலகின் ஆபத்தான நாய் வகைகளில் கங்கல் வகையும் ஒன்று. இந்த நாய்க்கு பாதுகாப்பு உணர்வு அதிகம். அதனால் சற்று அச்சுறுத்தப்பட்டாலே ரொம்பவும் முரட்டுத்தனமாக மாறிவிடும். கிட்டத்தட்ட 50 முதல் 60 கிலோ எடை போடக்கூடிய உயிரினம். இதனால் இதை கையாள்வது ரொம்பவும் கடினமான விஷயம். இந்த வகை நாய்கள் தாக்க ஆரம்பித்தால் பேரழிவு நிச்சயம்.

மாஸ்டிஃப்கள்: இந்த வகை நாய்கள் மிகப்பெரிய சக்தி வாய்ந்த இனமாகும். இவற்றிற்கு தேவையானவற்றை செய்து தராவிட்டால் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். புதிய இடத்திற்கு செல்லும் பொழுது, புதிய ஆட்களை பார்க்கும் போது இவற்றிற்கு எச்சரிக்கை உணர்வு அதிகமாகும். இதனால் பேராபத்துக்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது.

கனே கார்ஸோ: இந்த வகை நாய்களை ஆக்ரோஷமான வகையைச் சார்ந்தவை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் முறையான வகையில் வளர்க்கவில்லை என்றால் கண்டிப்பாக ஆக்ரோஷமாக மாறிவிடும். இந்த வகை நாய்க்கு பாதுகாப்பு உள்ளுணர்வு அதிகம் என்பதால் லேசாக சீண்டினாளே கடித்து குதறி விடும். இதன் கூர்மையான பற்கள் ஆளை காலி செய்யும் அளவிற்கு உறுதியானது.

சவ்சவ்: இந்த வகை நாய்கள் பார்ப்பதற்கு தான் கரடி பொம்மைகள் போல் இருக்கும். உண்மையில் ரொம்பவும் பேராபத்தானவை. தன்னை வளர்க்கும் நபரை தவிர வேறு யாரைப் பார்த்தாலும் இந்த நாய்களுக்கு பாதுகாப்பு உள்ளுணர்வு அதிகம் வரும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் இந்த நாயை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ராட்வைலர்: சென்னை சிறுமியை தாக்கியது இந்த வகை நாய்கள் தான். இந்த நாய்களுக்கு பெரிய தாடைகளும், வலிமையான தசை நார்களும் இருக்கும். இவை கடித்தால் தோலை தாண்டி எலும்பை கூட உடைக்கும் அளவுக்கு காயம் ஏற்படும். நரம்புகளை கூட பாதிக்கும். இதனால் இந்த வகை நாய்களை வீட்டில் வளர்க்கவே கூடாது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்