தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க.! குணச்சித்திர நடிகர் சிவாஜி அகால மரணம், காரணம் கேட்டு அதிர்ச்சியில் கமல்

R.S.Sivaji Passed Away: இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்தே திரை உலகில் ஏகப்பட்ட உயிரிழப்புகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். சரத் பாபு, மனோபாலா உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் நம்மை விட்டு நீங்கி துயரத்தை கொடுத்த நிலையில் அடுத்த உயிரிழப்பும் திரையுலகை கதி கலங்க வைத்திருக்கிறது.

அந்த வகையில் பல படங்களில் காமெடி, குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர் ஆர் எஸ் சிவாஜி இதய நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உடல்நல குறைவின் காரணமாக மரணம் அடைந்துள்ளார். 66 வயதாகும் சிவாஜியின் மறைவுக்கு தற்போது திரைத்துறை பிரபலங்கள் அனைவரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Also read: ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு சென்ற தூது..போன் போட்டு கமலிடம் மம்முட்டி போட்ட போடு

அதிலும் இவருடைய மரண செய்தியை கேட்ட கமல் தற்போது மிகுந்த துயரத்தில் இருக்கிறாராம். ஏனென்றால் சிவாஜி பல படங்களில் நடித்திருந்தாலும் கமலின் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

அதிலும் அபூர்வ சகோதரர்கள் படத்தில் போலீசாக வரும் ஜனகராஜ் உடன் இருக்கும் கான்ஸ்டபிள் ஆக சிவாஜி வருவார். அதில் தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க என்று அவர் கூறும் வசனம் இப்போதும் கூட வெகு பிரபலம். இப்படி பல நகைச்சுவை காட்சிகள் மூலம் இவர் தன்னை நிரூபித்திருக்கிறார்.

Also read: லெவல் மாறியதால் உச்சாணி கொம்புக்குப் போகும் கமல்.. ராஜ்கமல் பிலிம்ஸ் உலக நாயகனுக்கு கொடுத்த அந்தஸ்து

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி படத்திலும் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பாரிஸ் ஜெயராஜ், நயன்தாராவின் கோலமாவு கோகிலா, சூரரைப் போற்று, தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களின் மூலம் இவர் நம்மை மகிழ்வித்து இருக்கிறார்.

இவ்வாறாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பில் தன் முத்திரையை பதித்த இவருடைய மரணம் தற்போது கடும் துயரத்தை கொடுத்துள்ளது. இருப்பினும் இவருடைய நகைச்சுவை வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையில் அகால மரணம் அடைந்திருக்கும் சிவாஜியின் ஆத்மா சாந்தி அடைய நாம் ஆண்டவனை பிரார்த்திப்போம்.

Also read: 4 வாரிசு நடிகர்களை டார்கெட் செய்யும் கமல்.. ராஜ் கமல் ஃபிலிம்ஸ்-க்கு வந்த பெரிய இடத்து தூது

- Advertisement -