ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

எதிர்நீச்சல் சீரியலை பாழாக்கிய 6 விஷயங்கள்.. குணசேகரனை விட பெண்களை அசிங்கப்படுத்தும் ஜீவானந்தம்

6 things that ruined ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன், வீட்டில் இருப்பவர்களில் யாருக்காவது ஒருத்தருக்கு கல்யாணத்தை பண்ணி வியாபாரம் பண்ண வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார். அந்த வகையில் மகளிர் அமைப்பிலிருந்து தர்ஷினிக்கு கல்யாணத்தை பண்ண கூடாது என்று சொல்லியதால் இப்பொழுது தர்ஷனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று முடிவு பண்ணிவிட்டார்.

அதனால் உமையாளின் மகள் கீர்த்திக்கும் தர்ஷனுக்கும் கல்யாணம் பண்ணுவதற்கு பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்து விட்டார். பெண்களின் முன்னேற்றத்தையும் சொந்த காலில் நின்னு ஜெயிக்கும் விதமாக ஆரம்பித்த கதை தற்போது தட்டு தடுமாறி வருகிறது. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலை பாழாக்கிய பல விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

குணசேகரன் வீட்டு மருமகள்களாக இருக்கும் பெண்கள் வெறும் வாய்சவடால் மட்டும்தான் விடுவதற்கு லாய்க்கு. மற்றபடி எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் தோல்வியை தான் பார்ப்பார்கள் என்று இப்பொழுது வரை நிருபித்து காட்டி வருகிறார். அடுத்ததாக ஜனனி மற்றும் சக்தியை வெறும் டம்மியாக வைத்து பார்ப்பவர்களை எரிச்சல் படுத்தி வருகிறது.

ஆதிரை, கரிகாலனே வேண்டாம் என்று சொல்லி அருணை தேடி போன நிலையில் அவர்களுடைய கல்யாணம் தற்போது வரை கேள்விக்குறியாக இருக்கிறது. அடுத்து ஜீவானந்தம் மனைவி இறப்பிற்கு இன்னும் வரை எந்த ஒரு தண்டனையும் கொடுக்காமல் அந்த கதை அப்படியே டிராப் ஆகிவிட்டது.

கதையை சொதப்பும் திருச்செல்வம்

இதற்கிடையில் குணசேகரனை எதிர்த்து ஈஸ்வரி எலெக்ஷனில் நின்னு ஜெயிப்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் இப்பொழுது வரை என்னவென்று தெரியாத அளவிற்கு கதையை மறந்து போய்விட்டது. இதனை அடுத்து அப்பத்தாவின் இறப்பை பற்றி எந்தவித தகவலும் தெரியாமல் மர்மமாகவே இருக்கிறது. இதில் அப்பத்தா உயிரோடு இருக்கிறார் என்றால் ஏன் இன்னும் வரை காட்டவில்லை.

ஒருவேளை இறந்துவிட்டார் என்றால் அதற்கான எந்த ஒரு தடயமும் தெரியவில்லை. ஆரம்பத்தில் ஜீவானந்தம் மற்றும் அவர்களுடைய கோஷ்டியை ரொம்ப கெத்தாக காட்டிவிட்டு தற்போது இருக்கும் இடம் தெரியாமல் டம்மியாக்கி விட்டார்கள். இதற்கிடையில் அந்த வீட்டில் உள்ள மருமகள்கள் ஒவ்வொருவரும் அவருக்கான வேலையை பார்த்த நிலையில் அது எதுவும் சரி இல்லாமல் அப்படியே தலைமுழுகி விட்டார்கள்.

இப்படி இந்த நாடகத்தில் விட்ட குறை தொட்ட குறையாக ஏகப்பட்ட விஷயங்கள் மர்மமாகவே இருந்து வருகிறது. இதில் இப்பொழுது புதுசாக உமையாளை வைத்து ஆடுபுலி ஆட்டத்தை ஆரம்பித்து பெண்களை மட்டமாக காட்டுகிறார்கள். அந்த வகையில் குணசேகரனை விட ரொம்பவே மோசமான கேரக்டரில் தான் ஜீவானந்தம் கதையை சித்தரித்து வருகிறார். ஒரு வேளை உண்மையான குணசேகரன் கேரக்டரில் தான் இந்த நாடகத்தை எடுக்கும் இயக்குனர் திருச்செல்வம் இருக்கிறாரோ என்னவோ.

- Advertisement -

Trending News