கொடூர விபத்தை மையமாக வைத்து ஓடிய 6 படங்கள்.. பிரதர்- நஸ்ரியா காதலை மறக்க முடியுமா!

வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! நமது வலைதளம் வாயிலாக பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் காணவிருக்கும் தலைப்பு விபத்துகளால் திருப்பங்கள் கொண்ட தமிழ் சினிமாக்கள். இந்த லிஸ்டில் உள்ள படங்களில் விபத்து ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது.

எங்கேயும் எப்போதும்: இந்த தலைப்பிற்கு மிகவும் பொருத்தமான ஒரு திரைப்படம். இரண்டு காதல் ஜோடிகள், ஒரு பயணம், அதில் விபத்து, இடையில் அவர்களது காதல் கதை என்று இயக்குனர் திறம்பட கதை சொல்லி இருப்பார். நடிகைகள் அனன்யா, அஞ்சலி என்று இருவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். இருவரும் சிறப்பாக நடித்திருந்தனர். பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை சரவணன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் வரும் பேருந்து விபத்து காட்சி தத்ரூபமாக இருக்கும். மேலும் சாலைகளில் நாம் ஆங்காங்கே காணும் விபத்து பகுதி எச்சரிக்கை பலகை எப்படி வைக்க படுகிறது என்பதை தெளிவாக பதிவு செய்து உள்ளனர், இந்த படத்தில்.

அன்பே சிவம்: தமிழ் சினிமா ரசிகரகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய அவியமில்லாத படம். கம்யூனிஸ்ட் சிவம், நாகரிக அன்பு இருவருக்கும் இடையேயான நட்பு என்று படம் உலகத்தரம். படத்தில் இரண்டு விபத்துக்கள். ஒன்று அழகான தோற்றம் கொண்ட சிவம் எப்படி பேருந்து விபத்தால் கால் இழந்து முகத்தில் தழும்புடன் மாறியதை கூறும். இன்னொன்று மாபெரும் ரயில் விபத்து. தமிழ் சினிமாவின் முக்கியமான இந்த படத்தை சுந்தர் சி இயக்க, கதையை கமல் உருவாக்கி இருந்தார்.

ரிதம்: அர்ஜுன், மீனா, ஜோதிகா, லட்சுமி உட்பட பலர் நடித்திருந்த இந்த படத்தை வசந்த் இயக்கி இருந்தார். கதைப்படி அர்ஜுன் தனது மனைவி ஜோதிகாவை ரயில் விபத்தில் பலி கொடுக்கிறார். அதே விபத்தில் மீனாவின் கணவரும் இறந்து போக இருவரும் விதி வசத்தால் சந்திக்கிறார்கள். அதன் பிறகு அவர்களுக்குள் ஏற்படும் அன்பை விவரிக்கிறது படம். ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்.

மௌன ராகம் / ராஜா ராணி: மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், மோகன், ரேவதி உட்பட பலர் நடிக்க, இளையராஜா இசை அமைத்த திரைப்படம் மௌன ராகம். அடிக்கடி போராட்டம், அடிதடி என்று திரியும் கார்த்திக்கிடம் காதல் கொள்கிறாள் நாயகி. எதிர்பாரா விபத்தில் அவர் இறந்து போக வீட்டில் பார்க்கும் மோகனை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் அவருடன் இணக்கமாக இருக்க முடியாமல் விவாகரத்து கோருகிறார். பிறகு அவர்களுக்குள் காதல் மலர்ந்ததா? இல்லையா? என்பதை சுவாரசியமாக சொல்லி இருந்தார் இயக்குனர்.

கிட்ட தட்ட இதே கதையை கொஞ்சம் பட்டி டின்க்கரின் பார்த்து, அட்லீ உருவாக்கிய படம் ராஜா ராணி. பெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில் ஆர்யா, நஸ்ரியா, ஜெய், நயன்தாரா, சந்தானம் உட்பட பலர் நடித்து இருந்தனர். இதில் ஆர்யா, நஸ்ரியாவை காதலிக்கும்போது கொடூர விபத்தில் இறந்து போகிறார். இதனால் நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது ஆர்யாவுக்கு.

கோபுர வாசலிலே: கார்த்திக், பானுப்ரியா, நாசர், சார்லி மேலும் பலர் நடித்திருந்த இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கி இருந்தார். பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக இருந்த பாடல்களை இளையராஜா இந்தப் படத்திற்காக உருவாக்கி இருந்தார். கதைப்படி கார்த்திக் காதலிக்கும் நாயகி எதிர்பாராமல் கார் விபத்தில் பலியாகி விடுவார். அதனால் திருமணம் பற்றி யோசிக்காமல் வாழ்ந்து வருவார். அவர் வாழ்கையில் இன்னொரு பெண் வந்தால் என்னவாகும் என்பது தான் சுவாரசியமான பின்பாதி கதை. நிச்சயம் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படம்.

சத்ரியன் / தெறி: மணிரத்னம் தயாரிப்பில் இயக்குனர் சுபாஷ் இயக்கிய இத்திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த், பானுப்ரியா, திலகன் போன்றோர் நடித்திருந்தனர். நேர்மையான போலீஸ் அதிகாரி, அவர் மனைவி வெடி விபத்தில் இறந்து போக, குழந்தைகளுடன் அமைதியாக வாழ்கிறார். ஆனால் விதி விடுவாதாய் இல்லை. மீண்டும் போலீஸாக பதவி ஏற்று எதிரிகளை துவம்சம் செய்கிறார். மலையாள நடிகர் திலகன் இந்த படத்தில் அருமைநாயகம் என்னும் பெயரில் மிரட்டி இருப்பார்.

இதே கதையை உல்டா கூட செய்யாமல் அப்படியே எடுத்தார் நம்ம 7 ஸ்வரம், 7 ராகம் புகழ் அட்லீ. தளபதி எப்படி சத்திரியன் பார்க்காமல் விட்டார் என்பது தெரியவில்லை. இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் மகேந்திரன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.