ஆச்சி மனோரமாவின் 6 சூப்பர்ஹிட் படங்கள்.. இப்போ வரைக்கும் மீம்ஸ்களில் மறக்க முடியாத சின்ன கவுண்டர் ஆத்தா

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 1000த்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரே நடிகை என்றால் ஆச்சி மனோரமா தான். இவரின் வெகுளியான நடிப்பிற்கும், தேர்ந்தெடுக்கும் துணிச்சலான கதாபாத்திரத்திற்கும் எத்தனை நடிகைகள் இனி வரும் காலத்தில் வந்தாலும், இவரை போல் நடிக்கமுடியாது என்ற அளவிற்கு நடிப்பு அரக்கியாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் மனோரமா. இதனிடையே இவரின் நடிப்பில் சக்கைபோடு போட்ட 6 சூப்பர்ஹிட் படங்களை பார்க்கலாம்.

சம்சாரம் அது மின்சாரம் : 1986 ஆம் ஆண்டு இயக்குனர் விசு இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் அந்தாண்டின் சிறந்த குடும்ப படம் என்ற தேசிய விருது,பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைக்கப்பெற்றது. அந்த அளவிற்கு இப்படம் ஒரு குடும்பத்தில் நடக்கும் மனஸ்தாபங்கள்,வீராப்பு, மன அழுத்தம் என அனைத்தையும் ஒரு சேர இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இப்படத்தில் கண்ணம்மா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மனோரமா, ஹே கம்முணுகட என்ற டயலாக்கினை அந்த வீட்டின் சம்மந்தியிடம் துணிச்சலாக பேசியதை அவ்வளவு எளிதாக நம்மால் மறக்கமுடியாது.

பாட்டி சொல்லை தட்டாதே: 1988 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் உருவான பாட்டி சொல்லை தட்டாதே திரைப்படத்தில் மனோரமா, ஊர்வசி, சில்க் சிமிதா உள்ளிட்ட பலர் நடித்திருப்பார். மனோரமா பணக்கார பாட்டியாக படம் முழுவதும் வளம் வந்து பேரன் பாண்டியராஜனின் காதலையும், அவருக்கு வரும் இன்னல்களையும் எப்படி நகைச்சுவையுடன் கையாள்கிறார் என்பதே இப்படத்தின் கதை. டெல்லிக்கு ராஜா ஆனாலும் பாட்டி சொல்லை தட்டாதே என்ற பாடல் மனோரமா குரலில் வெளி வந்து சக்கைபோடு போட்டிருக்கும்.

Also Read : மனோரமா இடத்தை பிடிக்க வந்த 5 நடிகைகள்.. கடைசி வரை அசைக்க முடியாமல் ஆட்சி செய்த ஆச்சி

நடிகன்:  1990ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியான நடிகன் படத்தில் சத்யராஜ், கவுண்டமணி, குஷ்பூ உள்ளிட்டோர் நடித்திருப்பர். காமெடி,ஆக்ஷன் கலந்த இப்படத்தில் ஆனந்த கற்பகவல்லி கதாபாத்திரத்தில் மனோரமா வலம் வருவார். கிழவனாக வேஷம் போட்டு மனோரமாவின் வீட்டிற்கு வந்த சத்யராஜை மனோரமா ஒரு தலையாக அவரை காதலித்து பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

நாட்டாமை: 1994 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார், குஷ்பு, மீனா, விஜயகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருப்பார். இப்படத்தில் விஜயகுமாரின் தங்கையாகவும், வில்லன் பொன்னம்பலத்தின் அம்மாவாகவும் மனோரமா நடித்திருப்பார். குஷ்பூவை பெண் பார்க்க செல்லும் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சியில் தன் மகனையே கொன்ற தாயாக பல செண்டிமெண்ட் காட்சிகளுடன் இப்படத்தில் நடித்திருப்பார் மனோரமா.

Also Read : 1500 படங்கள் நடித்து கின்னஸ் சாதனை படைத்த மனோரமா.. கதாநாயகியாக நடித்த ஒரே படம்

சின்ன கவுண்டர்: 1992 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த், சுகன்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படத்தில் விஜயகாந்தின் தாயாக மனோரமா நடித்திருப்பார். படம் முழுவதும் கவுண்டமணியுடன் வம்பிழுத்து வரும் மனோரமாவின் நகைச்சுவை காட்சி இன்று வரை பலருக்கும் விருப்பமானது. ஐயோ நீ சிரிக்கமட்டும் செஞ்சிராத ஆத்தா என்ற கவுண்டமணியின் டயாலாக்குகள் இன்றுவரை மீம்ஸ்களில் பிரபலமானது.

மணல் கயிறு: 1982 ஆம் ஆண்டு இயக்குனர் விசுவின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் எஸ்.வி,சேகர், மானோரமா, விசு உள்ளிட்ட பலரும் நடித்திருப்பர். தன் மகளை காதலிக்கும் எஸ்.வி.சேகருக்கு விசு கொடுக்கும் 8 நிபந்தனைகளை சரியாக செய்தால் தான் திருமணம் செய்ய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார். ஒவ்வொரு நிபந்தனையையும், நகைச்சுவையுடன் கையாண்டு வரும் எஸ்.வி.சேகருக்கு உதவியாக மனோரமா துர்கா கதாபாத்திரத்தில் வலம் வருவார்.

Also Read : மனோரமா கடைசி வரை ஏங்கிய ஒரே விஷயம்.. அதை அறிந்தவர் ஜெயலலிதா மட்டுமே!

Next Story

- Advertisement -