வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

உயரமான நடிகைகள் என்றால் இவருக்கு ரொம்பவும் இஷ்டம்.. ஆறடியில் கமல் வளைத்து போட்ட 6 ஹீரோயின்கள்

நடிகர் கமலஹாசன் சினிமாவில் எந்த அளவுக்கு முன்னோடியாக இருக்கிறாரோ அதே அளவுக்கு காதல் சர்ச்சைகளிலும் அதிகமாக சிக்கி இருக்கிறார். பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணியை திருமணம் செய்து விவாகரத்து ஆன பிறகு இந்தி நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார். இதில் அவருடைய மூத்த மகள் சுருதிஹாசன் பிறந்த பின்பு தான் இவர்கள் இருவருக்கும் திருமணமே நடந்தது. அதன் பின்னர் சரிகாவுடனும் விவாகரத்து ஆன பின்னர் கமலஹாசன் அடுத்தடுத்து நிறைய ஹீரோயின்களுடன் சர்ச்சைகளிலும் சிக்கினார்.

கௌதமி: நடிகை கௌதமியுடன் கமலஹாசன் தேவர் மகன் மற்றும் நம்மவர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த சமயங்களில் எல்லாம் இவர்கள் இருவருக்கும் எந்த கிசுகிசுக்களும் வந்ததில்லை. சரிகாவுடன் ஆன விவாகரத்துக்கு பின்பு சில வருடங்களில் கமலஹாசன் கௌதமியை திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வந்தார். தற்போது இருவரும் பிரிந்து விட்டனர்.

Also Read:வெறும் 35 நாட்களில் கமல் செய்யப் போகும் ராஜதந்திரம்.. பெத்த லாபத்துக்கு விரித்த மொத்த வலை

சிம்ரன்: நடிகை சிம்ரன் மற்றும் கமலஹாசன் இருவரும் பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களில் இணைந்து நடித்தனர் அப்போது சிம்ரன் அவருடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார். சரிக உடனான விவாகரத்துக்கு காரணமே இதுதான் என்று கூட அப்போது தகவல்கள் பரவின.

ஆண்ட்ரியா: நடிகை ஆண்ட்ரியா கமலஹாசன் உடன் இணைந்து விஸ்வரூபம் மற்றும் உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதில் உத்தம வில்லன் திரைப்படத்தில் இருவரும் ரொம்பவே நெருக்கமாக நடித்திருப்பார்கள். அப்போதே இவர்கள் இருவருக்குள்ளும் காதல் இருந்ததாக செய்திகள் வெளியாகின.

பூஜா குமார்: நடிகை பூஜா குமார் கௌதமியின் மூலமாகத்தான் கமலஹாசனுக்கு அறிமுகமானார். இவர்கள் இருவரும் இணைந்து உத்தமவில்லன் மற்றும் விஸ்வரூபம் படங்களின் நடித்தனர். அதில் இருவருக்குள்ளும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது. கமலஹாசனின் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ளும் அளவுக்கு இவர்களுடைய உறவு இருந்தது .

Also Read:அவசரமாய் இத்தாலியில் இருந்து வரும் கமல்.. உலகநாயகனுக்கு தெரியாது அவங்க அப்படின்னு

திரிஷா: நடிகை திரிஷா உலகநாயகன் கமலஹாசன் உடன் இணைந்து மன்மதன் அம்பு திரைப்படத்தில் நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் நெருங்கிய உறவிருப்பதாக கிசு கிசுக்கப்பட்டது. அதன் பின்னர் இருவரும் இணைந்து தூங்காவனம் திரைப்படத்திலும் நடித்தனர்.

அபிராமி: உலக நாயகனின் விருமாண்டி திரைப்படத்தில் நடிகை அபிராமி அவருக்கு கதாநாயகியாக இணைந்துநடித்தார். இருவருக்குள்ளும் அதிக நெருக்கமான காட்சிகள் இருந்தது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் ஒன்றாக கிசுகிசுக்கப்பட்டனர். நல்ல நடிப்பு திறமை இருந்து விருமாண்டி திரைப்படத்திற்கு பிறகு அபிராமி சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார்.

Also Read:புலிக்கு வாலாக இருப்பதை விட பூனைக்கு தலையாக இருக்கலாம்.. கமல் கூப்பிடும் வர மறுத்த ஜாம்பவான்

 

- Advertisement -

Trending News