சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

என்ன சொல்றீங்க இந்த 6 சூப்பர் ஹிட் பாடல் பாடியது புஷ்பவனம் குப்புசாமியா? குத்தாட்டம் போட்ட விஜய்

தமிழ் சினிமாவில் நாட்டுப்புற கலைஞராக பல பாடல்களை பாடி மிகவும் பிரபலமானவர் தான் புஷ்பவனம் குப்புசாமி. அதுமட்டுமல்லாமல் தன்னுடைய தனித்துவமான குரலால் பல ஹிட் பாடல்களையும் கொடுத்துள்ளார். அதிலும் நாம் கேட்ட ரசித்த ஒரு சில பாடல்கள் இவர் பாடியதா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தரமான பர்பாமென்ஸ் கொடுத்திருப்பார். அப்படியாக புஷ்பவனம் குப்புசாமி கொடுத்த 6 சூப்பர் ஹிட் பாடல்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா: இயக்குனர் தரணி இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எதிரும் புதிரும். மேலும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” என்னும் பாடலில் சிம்ரன், பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரத்துடன் நடனத்தில் வெளுத்து வாங்கி இருப்பார். அதுமட்டுமல்லாமல் இன்றைய தலைமுறை இளசுகளையும் கூட ரீல்ஸ் செய்ய வைத்த பாடலாகவே இருந்து வருகிறது.

Also Read: சிம்ரன் உடன் 22 வருடங்களுக்குப் பிறகு இணையும் நடிகை.. மல்டி ஸ்டார்களுக்கு போட்டியாக வரும் மல்டி ஆக்ட்ரஸ் மூவி

புத்தம் புது பாட்டு: தங்கர் பச்சன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு பார்த்திபன் நடிப்பில் வெளியான திரைப்படம் தென்றல். மேலும் இப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் இடம் பெற்றிருந்த “புத்தம் புது பாட்டு வந்தா தாண்ட வந்தோனே” என்னும் பாடலில் பறையின் மூலம் ராகவா லாரன்ஸ் அனைவரையும் உறைய வைத்திருப்பார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அர்த்தமுள்ள பாடலாக அமைந்திருந்தது.

காதலுக்கு பள்ளிக்கூடம்: சசி சங்கரின் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு சூர்யா மாறுபட்ட வேடங்களில் நடித்த திரைப்படம் பேரழகன். இதில் சூர்யா, ஜோதிகா, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் இடம் பெற்றிருந்த “காதலுக்கு பள்ளிக்கூடம் கட்ட போறேன் நானடி” என்னும் பாடல் அனைவரின் மனம் கவர்ந்த பாடலாகவே அமைந்திருந்தது.

Also Read: எதிர்பார்ப்பை மிரளவிடும் சூர்யா 42.. அட்டகாசமான அப்டேட் கொடுத்த டீம்

காத்தாடி போல: சிங்கம்புலி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் மாயாவி. இதில் சூர்யா உடன் ஜோதிகா, சத்யன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் இடம் பெற்றிருந்த “காத்தாடி போல ஏண்டி என்ன சுத்துற” என்னும் பாடலில் சூர்யாவுடன் ஜோதிகா ஆடிய இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் வைரலானது.

குருவி கொடஞ்ச கொய்யாப்பழம்: தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு பார்த்திபன் நடிப்பில் வெளியான திரைப்படம் அழகி. இதில் பார்த்திபன் உடன் நந்திதா தாஸ், தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தில் இடம் பெற்றிருந்த “குருவி கொடஞ்ச கொய்யாப்பழம் கொண்டு வந்து தரவா” என்னும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாடல் ஆகவே அமைந்திருந்தது.

அப்பன் பண்ண தப்புல: பேரரசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் திருப்பாச்சி. இதில் விஜய் உடன் த்ரிஷா, சாயா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு தீனா, தேவி ஸ்ரீ பிரசாத், மணி ஷர்மா ஆகியோர் இசையமைத்திருந்தனர். அதிலும் இப்படத்தில் இடம் பெற்றிருந்த “அப்பன் பண்ண தப்புல அதா பெத்த வெத்தல” என்னும் பாடலில் விஜய் உடன் திரிஷா நடனத்தில் பட்டையை கிளப்பி இருப்பார். அதுமட்டுமல்லாமல் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கூட குத்தாட்டம் போட வைக்கும் பாடலாகவே இன்று வரையிலும் இருந்து வருகிறது.

Also Read: சிம்ரன் நடிப்பில் வெற்றி கண்ட 5 படங்கள்.. விஜய் உடன் சூப்பர் ஹிட் கொடுத்த அந்த இரண்டு படங்கள்

- Advertisement -

Trending News