சிம்ரன் நடிப்பில் வெற்றி கண்ட 5 படங்கள்.. விஜய் உடன் சூப்பர் ஹிட் கொடுத்த அந்த இரண்டு படங்கள்

90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இடுப்பழகி சிம்ரன். அதிலும் படத்தில் நடிகர்களுக்கே டப் கொடுக்கும் விதத்தில் தனது நடனத்தின் மூலம் அனைவரையும் அசர வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மிகவும் பிரபலமானார். எல்லா காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் எவர்கிரீன் நடிகையாக வலம்வர கூடியவர் நடிகை சிம்ரன். அப்படியாக இவர் நடிப்பில் கிளாமரையும் தாண்டி வெற்றி கண்ட 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

பிரியமானவளே: கே செல்வபாரதி இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரியமானவளே. இதில் தளபதி விஜய் உடன் சிம்ரன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். மேலும் எஸ்பி பாலசுப்ரமணியம், வையாபுரி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் சிம்ரன், பிரியா என்னும் கேரக்டரில் விஜய்யின் மனைவியாக நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து அக்ரீமெண்ட் முறைப்படி இருவரும் பிரிந்து விடுகின்றனர். அதன் பின் உண்மையான காதலை புரிந்து கொண்ட விஜய்யை மனைவி பிரியா ஏற்றுக் கொள்வாரா, இல்லையா என்பதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது.

Also Read: என்ன இது சிம்ரன்? வயசானாலும் உன்னோட அழகும் ஸ்டைலும் குறையவே இல்ல

அவள் வருவாளா: ராஜ்கபூர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவள் வருவாளா. இதில் அஜித் உடன் சிம்ரன், சுஜாதா, பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்ரனின் அழகில் மயங்கி அஜித் அவரை ஒருதலையாக காதலித்து வருவார். ஆனால் திருமண வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ள சிம்ரன், அஜித்தின் உண்மையான காதலை புரிந்து கொண்டு அனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒரு கட்டத்தில் ஏற்று கொள்கிறார். மேலும் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

ஏழுமலை: நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஏழுமலை. இதில் அர்ஜுன் உடன் சிம்ரன், காஜலா, மும்தாஜ், விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்ரன், அர்ஜுன் மனைவியாக லட்சுமி என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் பாசத்திற்காக தனது கணவரை ஏமாளி ஆக்கும் அர்ஜுனின் அண்ணன்களை தனது மிரட்டலான பேச்சால் பந்தாடி இருப்பார். இதனைத் தொடர்ந்து இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Also Read: தாலி கட்டிய பின் சினிமாவிற்கு முழுக்கு போட்ட 5 நடிகைகள்.. கல்லா காலியானதால் மீண்டும் நடிக்க வந்த சிம்ரன்

துள்ளாத மனமும் துள்ளும்: எழில் இயக்கத்தில் ஆர் பி சவுத்ரி தயாரிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இதில் விஜய் உடன் சிம்ரன், மணிவண்ணன், தாமு, வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்ரன் ஆரம்பத்தில் இருந்தே விஜய்யை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும்படியான சூழல் ஏற்படுகிறது. இருந்தாலும் ஒரு கட்டத்தில் விஜய் மூலமாகவே தனது பார்வையை இழக்கும் இவர் கடைசியில் குட்டியின் காதலை புரிந்து கொண்டு முழுமையாக ஏற்றுக் கொள்கிறார். மேலும் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

வாரணம் ஆயிரம்: கௌதம் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம். இதில் சூர்யா உடன் சமீரா ரெட்டி, திவ்யா, ஸ்பந்தனா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சிம்ரன் மாலினி கிருஷ்ணன் என்னும் கேரக்டரில், சூர்யாவின் மனைவி மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் ஒரு தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான பாசப்பிணைப்பினை மிக அழகாக எடுத்துக் கூறும் கதையாக இப்படம் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படம் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டை பெற்றது.

Also Read: கமலுக்கு முன்பே சிம்ரனுடன் கிசுகிசுக்கப்பட்ட ஹீரோ.. செம கெமிஸ்ட்ரியில் வெளிவந்த 4 படங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்